Last Updated : 23 Feb, 2016 08:35 AM

 

Published : 23 Feb 2016 08:35 AM
Last Updated : 23 Feb 2016 08:35 AM

ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோவில் பிளவு?

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவில் (ஜாக்டோ), நிர்வாகிகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள தால் பிளவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

கோரிக்கைகளுக்காக தனித் தனியாக இயங்கி வந்த ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து கூட்டு நடவடிக்கை குழுவை ஏற்படுத்தின. இதில் சுமார் 25-க்கும் அதிகமான ஆசிரியர் சங்கங்கள் உள்ளன.

பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதியக் குழு முரண்பாடுகளைக் களைதல் ஆகிய இரு பிரதான கோரிக்கைகள் உட்பட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து ஆர்ப்பாட்டம், உண்ணா விரதம், பணிப் புறக்கணிப்பு என பல கட்ட போராட்டங்களை ஜாக்டோ நடத்தியது. குறிப்பாக, ஜனவரி இறுதியில் போராட்டங்களை தீவிரமாக்கியது.

அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சங்கங்கள் அடங்கிய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஒரு பக்கம் தொடர் பணிப் புறக் கணிப்பில் ஈடுபட்டு வந்த நிலை யில், ஜாக்டோ அமைப்பினர் மறுபக்கம் போராட்டத்தில் ஈடு பட்டு வந்தனர்.

இதனிடையே, தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரில் சாதகமான அறிவிப்பு வெளியாகும் என்று அனைத்து சங்கங்களும் எதிர்பார்த் திருந்த நிலையில், கடந்த 19-ம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அரசு ஊழியர்களுக்கு 11 அறிவிப்பு களை அறிவித்தார். அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், போராட்டங்களை தற்காலிகமாக ஒத்திவைத்து அறிவித்தது. இதனால், ஜாக்டோ உயர்நிலைக் குழு என்ன முடிவு எடுக்கும் என்று ஆசிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில், திருச்சியில் நேற்று முன்தினம் கூடிய ஜாக்டோ அமைப்பின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில், பொதுத் தேர்வெழு தும் மாணவர் நலனையும், சட்டப் பேரவைத் தேர்தலையும், மக்கள் நலனையும் கருதி 3 மாதங்களுக்கு அனைத்துப் போராட்டங்களையும் ஒத்திவைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

ஜாக்டோவில் இடம் பெற்றிருந்த சில ஆசிரியர் சங்கங்கள் ஏற் கெனவே எதுவும் சொல்லாமல் வெளியேறிவிட்டதாகக் கூறப்படும் நிலையில், உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட போராட்ட வாபஸ் முடிவால் மேலும் சில ஆசிரியர் சங்கங்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன.

குறிப்பாக, தமிழ்நாடு ஆசிரி யர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவரும், ஜாக்டோ உயர் நிலைக் குழு உறுப்பினருமான கு.தியாகராஜன் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் இருந்து வெளி நடப்பு செய்தார். அதேபோல, தமி ழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலை வரும், ஜாக்டோ பொதுக்குழு உறுப்பினருமான ஆ.அண்ணா துரை கூட்டத்திலேயே தனது கடுமையான அதிருப்தியை தெரிவித்தார்.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் மீனாட்சி சுந்தரம் கூட்டத்தில் பங்கேற்பதாகக் கூறியதாகவும், ஆனால், இந்த முடிவைத்தான் எடுக்கப்போகின்றனர் என்று தெரிந்ததாலேயே அவர் கூட்டத் துக்கு வராமல் புறக்கணித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஜாக்டோ உயர் நிலை நிர்வாகிகள் சிலரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது: சட்டப்பேரவையில் முதல்வர் அறி வித்த அறிவிப்பில் அரசு ஊழியர் சங்கத்தினருக்கு ஏதோ ஒரு வகை யில் பலன் கிடைத்துள்ளது என லாம். அரசு ஊழியர் சங்கம் போலவே வலிமையான போராட் டங்களை நடத்தியும் ஆசிரியர் களுக்கு பலன் கிடைக்கவில்லை. முதல்வரின் அறிவிப்பில் ஒரு இடத் தில்கூட ஆசிரியர் என்ற வார்த்தை இல்லை. முதல்வரின் அறிவிப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது என் பதை உணர்த்தும் வகையில் ஒரு போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும்.

பிப்ரவரி 25-ம் தேதி கோட் டையை நோக்கி பேரணி, பிப்ரவரி 26-ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று பிப்ரவரி 18-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எடுத்த முடிவை வாபஸ் வாங்கும் அளவுக்கு என்ன சலுகை ஆசிரியர்களுக்கு கிடைத்தது?. இத்தனை நாட்கள் போராட்டம் நடத்தியது இப்படி திடீரென வாபஸ் வாங்குவதற்காகவா? இதில் அரசியல் தலையீடு இருக்கிறதா என்பதை உறுதியாகக் கூற முடியாது. எனவே, எங்களது சங்க மாநில நிர்வாகிகளிடம் ஆலோசித்து ஜாக்டோவில் தொடர்ந்து நீடிப்பது குறித்து முடிவு செய்யப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x