Published : 29 Jul 2021 01:40 PM
Last Updated : 29 Jul 2021 01:40 PM
ரூ.10 கோடியில் பெண்கள் விடுதி கட்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் தந்துள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று ஒப்புதல் தந்துள்ள முக்கியக் கோப்புகள் விவரம்:
மத்திய அரசு நிதியுதவியுடன், "பாபு ஜகஜீவன் ராம் சத்ரவாஸ் யோஜனா" திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.10.96 கோடியில் பாகூர் மற்றும் காரையம்புத்தூர் வருவாய் கிராமங்களில் இரண்டு அட்டவணை இனப் பெண்கள் விடுதிகள் கட்டுவதற்கான நிர்வாக ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எந்த நேரத்திலும் தங்களது கைப்பேசி, மடிக்கணினி அல்லது கணினியைப் பயன்படுத்தி செட்டில்மென்ட் விவரப் பிரதிகள், எஃப்.எம்.பி நகல்கள் மற்றும் பட்டா நகல்களைப் பார்வையிட்டு நகல் எடுப்பதற்கு வசதியாகச் சான்றளிக்கப்பட்ட டிஜிட்டல் “பொது தளத்தில்“ பதிவேற்றம் செய்யும் இ-சேவைக்கான நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இணையதளம் வழியாக செட்டில்மென்ட் விவரப் பிரதிகள், பட்டா மற்றும் எஃப்.எம்.பி நகல்கள் ஆகியவற்றின் டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட பிரதிகள் வழங்க பயன்பாட்டாளர் கட்டணமாக ரூ. 50 வசூலிக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT