Published : 01 Feb 2016 03:45 PM
Last Updated : 01 Feb 2016 03:45 PM
தேனி மாவட்டத்தில் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய சுகாதாரத் துறை மூலம் மாதந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன.
இந்த முகாம்களில் பல்வேறு பரிசோதனைகளுடன், ஹெச்.ஐ.வி. பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது. இதில் ஹெச்.ஐ.வி தொற்று தெரிய வந்தால், அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், சில மாதங்களாக சிறப்பு முகாம் கள் நடத்தப்படவில்லை.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் ஹெச்.ஐ.வி. உள்ளோர் கூட்டமைப்பினர் கூறுகையில், சிறப்பு முகாம்களில் பரிசோதனையில் ஒருவருக்கு ஹெச்.ஐ.வி இருப்பது தெரியவந்தால், அது மற்ற வர்களுக்கு தெரியாது.
தற்போது சிறப்பு முகாம்கள் நிறுத்தப்பட்டு ஹெச்.ஐ.வி. கண்டறிய மட்டும் மொபைல் ஐசிடிசி வேனில் வந்து பரி சோதனை செய்கின்றனர். இதனால் அவமானத்துக்கு அஞ்சி பலர் பரிசோதனைக்கு உட்பட மறுத்து விடுகின்றனர். இதனால் ஹெச்.ஐ.வி இருந் தாலும் நோய் தாக்கம் அறியாமலேயே இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றனர். மருத்துவ இணை இயக்குநர் (பொ) சையதுசுல்தான் இப்ராகிமிடம் கேட்டபோது, முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முகாம்கள் நடத்தப்படுகின்றன. சிறப்பு முகாம்களை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT