Published : 24 Feb 2016 08:13 AM
Last Updated : 24 Feb 2016 08:13 AM
சட்டப்பேரவை தேர்தல் பணிகள் குறித்து மதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் வைகோ நேற்று தனித்தனியாக ஆலோ சனை நடத்தினார்.
மக்கள் நலக் கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான தொகுதி உடன்பாடு இன்னும் ஏற்படவில்லை. எனினும் தங்களுக்கு செல்வாக்கு அதிகமுள்ள, சாதகமான தொகுதிகளைக் கண்டறிந்து, அவற்றுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் மக்கள் நலக் கூட்ட ணியில் இடம்பெற்றுள்ள கட்சியினர் மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மதிமுகவின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெறுகிறது. இதற்காக திருச்சி வந்து தனியார் ஹோட்டலில் தங்கியுள்ள வைகோ, மதிமுகவின் திருச்சி, தஞ்சை, திருப்பூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை உட்பட அனைத்து மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகி களை தனித்தனியாக அழைத்து சட்டசபை தேர்தல் தொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து மதிமுக நிர்வாகிகள் கூறும் போது, “இச்சந்திப்பின்போது, மக்கள் நலக் கூட்டணிக்கு பூத் கமிட்டி உறுப் பினர்கள் நியமிக்கும் பணி, மாவட்ட, ஒன்றியம்வாரியாக செயல்வீரர்கள் கூட்டங்கள் நடத்தியதன் விவரம் குறித்து வைகோ கேட்டறிந்தார். மேலும், கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கையை துண்டுப் பிரசுரங்களாக அச்சடித்து வீடுதோறும் விநியோகிக்க வேண்டும். குறிப்பாக நடுநிலையாளர்கள், கல்வியாளர்கள் மத்தியில் மக்கள் நலக் கூட்டணி குறித்து விழிப்புணர்வை ஏற்ப டுத்தி, ஆட்சி மாற்றத்துக்கு அவர்களை ஒன்றுசேர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
அத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் நலக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள், மதிமுகவுக்கு சாதகமான தொகுதிகள் குறித்த விவரங்க ளையும் கேட்டறிந்தார். மேலும், சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதால், மக்கள் நலக் கூட்டணிக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறி, மாவட்டத்திலுள்ள அனைத்து தொகுதி களிலும் தேர்தல் பணிகளை வேகப் படுத்துமாறு வைகோ அறிவுரை வழங்கி யுள்ளார்” என்றனர்.
தற்போது மாவட்டச் செயலாளர்கள் அளித்துள்ள தகவல்களின் அடிப்படை யில், இன்று நடைபெற உள்ள பொதுக் குழுவில் கலந்தாலோசித்து சட்டப்பேர வைத் தேர்தலில் மதிமுக போட்டியிட உத்தேசிக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்த பட்டி யல் தயாரிக்கப்பட உள்ள தாக அக்கட்சியின் நிர்வாகிகள் தெரி வித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT