Last Updated : 26 Jul, 2021 02:51 PM

 

Published : 26 Jul 2021 02:51 PM
Last Updated : 26 Jul 2021 02:51 PM

மின்துறை தனியார்மயமாக்கும் விவகாரம்: மத்திய அரசை அணுகி கோரிக்கை வைக்க புதுச்சேரி அரசு முடிவு

புதுச்சேரி

மின்துறை தனியார்மயம் தொடர்பாக மாநில வளர்ச்சி, ஊழியர் நலனை அடிப்படையாக கொண்டு மத்திய அரசை அணுகி கோரிக்கை வைக்க உள்ளோம் என்று மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

புதுச்சேரி மின்சாரத் துறை தலைமை அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் இன்று நடந்தது ,கூட்டத்தில் துறை செயலர் தேவேஷ் சிங், கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் உயர் அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆய்வு கூட்டத்துக்கு பிறகு மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், "நகரப்பகுதி முழுவதும் உள்ள தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்ற உள்ளோம். நகரப்பகுதியில் ஆய்வு செய்து, எரியாத தெருவிளக்குகள் அனைத்தையும் எரிய வைப்போம். கட்டண உயர்வு அரசின் கொள்கைமுடிவு. அதை முதல்வரிடம் கலந்து பேசி முடிவு எடுப்போம்.

மின்கட்டண குளறுபடியை சரிசெய்ய மின்துறையை நவீனமயமாக்கும் முயற்சியை மத்திய அரசு எடுத்துள்ளது. அதில் பல கட்டமைப்பு உருவாக்குவதன் மூலம் இக்குளறுபடி சரியாகும்.

மின்துறை தனியார் மயமாக்கப்போவதாக மத்திய அரசு அறிவிப்பை கேட்கிறீர்கள். மத்திய அரசு சில முடிவு எடுத்து அமல்படுத்துகிறார்கள். அதன்படி மத்திய அமைச்சரை சந்தித்து பல கோரிக்கைகளை அரசு சார்பில் வைக்க உள்ளோம். மாநில வளர்ச்சி, ஊழியர் நலன் கருதி மத்திய அரசை அணுகி எங்கள் கோரிக்கை வைப்போம். அக்கோரிக்கையானது புதுவை மக்களும், ஊழியர்கள் நினைப்பதற்கு ஏற்றவாறு போல் இருக்கும்." என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x