Published : 25 Jul 2021 07:44 PM
Last Updated : 25 Jul 2021 07:44 PM
‘‘செயல்பாடு சரியில்லாத ஊராட்சி செயலர்கள் இடமாற்றம் செய்யப்படுவர் ,’’ என ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அவர். கே.எம்.சி. மருத்துவமனையில் ஆக்சிஜன் சேமிப்பு கொள்கலன்களை திறந்து வைத்தார்.
பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி விடுபட்ட 9 மாவட்டங்களுக்கும் செப்.15-க்குள் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். நீண்ட காலமாக ஊராட்சி செயலர்கள் ஒரே இடத்தில் பணியாற்றுகின்றனர். அவர்களில் சிலரது செயல்பாடு சரியில்லை எனப் புகார்கள் வருகின்றன. அவர்கள் விதிகளுக்கு உட்பட்டு இடமாறுதல் செய்யப்படுவர்.
கடந்த காலங்களில் ஊராட்சிகளுக்கான நிதி முறையாக வரவில்லை என்பது தெரிந்தது தான். தற்போது அனைத்து ஊராட்சிகளுக்கும் தேவையான நிதியை வழங்கி வருகிறோம். மேலும் மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டிய நிதியை தொடர்ந்து கேட்டுப் பெறுவோம், என்றார்.
மாங்குடி எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் தென்னவன், கே.எம்.சி.மருத்துவ குழும நிர்வாக இயக்குநர் சலீம், டிஎஸ்பி வினோஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT