Published : 23 Jul 2021 07:13 AM
Last Updated : 23 Jul 2021 07:13 AM
என்எல்சி சுரங்க நீர் கூட்டு குடிநீர் திட்டத்தில் 6 பேரூராட்சிகள், 3 ஒன்றியங்களைச் சேர்ந்த 625 கிராம ஊராட்சிகள் பயன் பெறும் வகை யில் திட்டப் பணி நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு கடலூர் மாவட் டத்தில் ரூ. 429 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நெய்வேலி என்எல்சி நிறுவன சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரினை ஆதா ரமாக கொண்டு தமிழ்நாடு குடி நீர் வடிகால் வாரியம் மூலம் கூட்டு குடிநீர் திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறது.
இதன்படி என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தில் இருந்து வெளி யேற்றப்படும் நீரை ஆதாரமாக கொண்டு இரும்புக் குழாய்கள் மூலம் கீழ்வளையமாதேவி கிராமத்தில் அமைய உள்ள 31.26 மில்லியன் லிட்டர் கொள்ளளவுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும். அங்கு அதிநவீன தொழில் நுட்பம் மிகுந்த உபகரணம் மூலம் நீர் சுத்திகரிக்கும் பணி நடைபெறும்.
அதன் பின்பு சுத்தரிக்கப்பட்ட நீரானது 22 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள நீர் சேகரிப்பு தொட்டியில் சேகரிக்கப்படும். இந்த நீர் மின் மோட்டார்கள் மூலம் புதுக்கூரைப்பேட்டை, கொத்தட்டை, கொட்டாரம், ஆவட்டி ஆகிய இடங்களில் உள்ள 4 பூஸ்டர் நீர் சேகரிப்பு தொட்டிகள், பல்வேறு பொதுநீர் சேகரிப்பு தொட்டிகள் மற்றும் ஊராட்சி அளவிலான நீர் சேகரிப்பு தொட்டிகளில் சேகரிக்கப்படும்.
இந்த சேகரிப்பு தொட்டியில் இருந்து ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள 789 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
இத்திட்டம் மூலம் திட்டக்குடி, பெண்ணாடம், மங்கலம்பேட்டை, வடலூர், குறிஞ்சிப்பாடி, கங்கைகொண்டான் ஆகிய 6 பேரூராட்சிகளில் நாள் ஒன்றுக்கு நபர் ஒன்றுக்கு 50 லிட்டர் ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் நிலையில் புதிதாக 85 லிட்டர் என்பதையும் கணக்கிட்டு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் தண்ணீர் வழங்கப்படும்.
இத்திட்டம் மூலம் விருத்தாசலம், மங்களூர், நல்லூர் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த 625 கிராம குடியிருப்புக்கு நாளொன்றுக்கு 35 லிட்டர் தண்ணீர் ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக 20 லிட்டர் சேர்த்து 55 லிட்டர் வழங்கப்படும்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேற்பார்வையில் இத்திட்டம் 2020 டிசம்பர் மாதம்தொடங்கப்பட்டது. 2022 ஆகஸ்ட்மாதம் முடிக்க திட்டமிடப்பட் டுள்ளது. தற்போது குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இத்திட்டத்தினால் குறிஞ்சிப்பாடி, வடலூர், கங்கைகொண்டான், பெண்ணாடம், திட்டக்குடி, மங்கலம்பேட்டை ஆகிய 6 பேரூ ராட்சிகள், விருத்தாசலம், மங்களூர், நல்லூர் ஆகிய 3 ஒன்றியங்களைச் சேர்ந்த 625 கிராம ஊராட்சி மக்கள் பயன் பெறுவார்கள் என்று தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரிய அதிகாரிகள் தெரி விக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment