Published : 22 Jul 2021 08:31 PM
Last Updated : 22 Jul 2021 08:31 PM

எம்.ஆர்.விஜயபாஸ்கர், மனைவி, தம்பி மீது வழக்குப்பதிவு; 26 இடங்களில் ரெய்டு நிறைவு: ரூ.25.56 லட்சம் பணம், ஆவணங்கள் பறிமுதல் 

சென்னை

தமிழகம் முழுவதும் அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.25 லட்சத்திற்கு மேல் கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விஜயபாஸ்கர் அவரது மனைவி, தம்பி மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் முன்னர் ஆண்ட அதிமுக அரசில் போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவி வகித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் அவரது தம்பி சேகர் ஆகியோர் பேரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புகார் எழுந்தது.

புகாரை விசாரித்த கடந்த கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் மூவர் மீதும் நேற்று 13(2)1 r/w 13(1)b, of the PC (Amendment) act 2018, மற்றும் 12 r/w, 13(2) r/w 13(1)b, of the PC (Amendment) act 2018-ன் படி வழக்குப்பதிவு செய்தனர்.

இன்று காலை திடீரென இன்று எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என சென்னையில் உள்ள வீடு உட்பட தமிழகம் முழுவதும் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் திடீர் ரெய்டு நடத்தினர். மாலை வரை இந்த சோதனை நடந்தது.

இந்த சோதனையில் கணக்கில் வராத 25 லட்சத்து 56 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்ற ஆவணங்கள், முதலீடுகள் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x