Published : 21 Jul 2021 03:16 AM
Last Updated : 21 Jul 2021 03:16 AM

தேசிய கயிறு வாரியம் மூலம் ஆண்டுக்கு ரூ.3,000 கோடிக்கு பொருட்கள் ஏற்றுமதி: புதிதாக பொறுப்பேற்ற தலைவர் குப்புராமு தகவல்

ராமநாதபுரத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய தேசிய கயிறு வாரியத் தலைவர் து.குப்புராமு. அருகில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, பாஜக மாவட்ட தலைவர் முரளிதரன் உள்ளிட்டோர்.

ராமநாதபுரம்

தேசிய கயிறு வாரியம் மூலம் ஆண்டுக்கு கயிறு, மிதியடி உள்ளிட்ட பொருட்கள் ரூ.3000 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என தேசிய கயிறு வாரியத் தலைவர் டி.குப்புராமு தெரிவித்தார்.

தேசிய கயிறு வாரியத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள பாஜக மாநில செய்தி தொடர்பாளர் து.குப்புராமுவுக்கு வரவேற்பு நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் நடைபெற்றது. பாஜக மாவட்டத் தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மாநில செயலாளர் சண்முகராஜ், அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா உட்பட பலர் வாழ்த்தி பேசினர்.

கூட்டத்தில் குப்புராமு பேசிய தாவது: தேசிய கயிறு வாரியம் தென்னை நார் கழிவுகளில் இருந்து கயிறு, மிதியடி, அழகு சாதனப் பொருட்கள் உட்பட பல்வேறு வகையான பொருட்களை ஆண்டுக்கு ரூ.3,000 கோடிக்கு ஏற்றுமதி செய்கிறது. இதை ரூ.10,000 கோடிக்கு உயர்த்த மத்திய அமைச்சர் நாராயணன் ரானேயும், நானும் திட்டமிட்டுள்ளோம். ராமநாதபுரம் மாவட்டத்திலும் தென்னை நார் கழிவிலிருந்து பல்வேறு பொருட்கள் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ராம நாதபுரத்தில் கயிறு வாரிய ஏற்று மதி மையம் அமைக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் அன்வர்ராஜா பேசுகையில், பிரதமர் துணிச்சலான முடிவுகளை எடுத்துள்ளார். குறிப்பாக மூத்த அமைச்சர்கள் சிலரை அமைச்சரவையில் இருந்து விடுவித்துள்ளார் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x