Published : 20 Jul 2021 03:14 AM
Last Updated : 20 Jul 2021 03:14 AM
பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப் பெண்கள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து அரசு, அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல் லூரிகளில் சேர மாணவர்கள் ஆர் வம் காட்டி வருகின்றனர்.
கரோனா பரவல் தீவிர மடைந்ததால் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவருக்கும் தேர்ச்சி வழங்கி அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இந்தநிலையில், 10-ம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் செய்முறைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக் கிடப்பட்டு தற்போது அறிவிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து தாங்கள் விரும்பிய கலை, அறி வியல் கல்லூரியில் சேர மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டி வரு கின்றனர்.
மதிப்பெண்கள் வெளியிடு வதற்கு முன்பே ஒரு சில தனியார், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் ஆன்லைனில் விண்ணப்பங்களை பெற்றனர். அதில் மதிப்பெண் தவிர மற்ற விவரங்களை மட்டும் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது மதிப் பெண்ணை குறிப்பிட்டு மீண்டும் விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தினர் அறி வுறுத்தி உள்ளனர். அதன்படி மதிப்பெண்களைக் குறிப்பிட்டு மாணவர்கள் விண்ணப்பித்து வரு கின்றனர்.
ஆனால், அரசு கல்லூரிகளில் விண்ணப்பங்களை பெறும் பணி இன்னும் தொடங்கவில்லை. ஜூலை 26 முதல் விண்ணப்பங்கள் பெறப்படலாம் எனத் தெரிகிறது.
இதுகுறித்து அரசு கல்லூரி முதல்வர் ஒருவர் கூறியதாவது: நடப்புக் கல்வி ஆண்டில் பெரும் பாலான தனியார், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் முதுநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முடிவடைந்து, ஆன்லைனில் பாடம் நடத்த தொடங்கிவிட்டனர். ஆனால், அரசு கல்லூரிகளில் இன்னும் முதுநிலை மாணவர் சேர்க்கையை தொடங்கவில்லை.
ஓரிரு நாட்களில் முதுநிலை வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ள நிலையில், இளநிலை வகுப்புகளுக்கும் சேர்க்கைப் பணியைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். உயர் கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகளை விரைவில் தொடங்க உள்ளோம் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT