Last Updated : 03 Mar, 2014 09:50 AM

 

Published : 03 Mar 2014 09:50 AM
Last Updated : 03 Mar 2014 09:50 AM

விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுகவில் பூசல்

விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளரா கவும் அமைச்சராகவும் இருந்த சி.வி. சண்முகத்தின் மீது தலைமைக்கு புகார்கள் சென்றதால் கட்சிப் பதவியும் அமைச்சர் பதவியும் கடந்த ஆண்டு அவரிடமிருந்து பறிக்கப் பட்டது. சண்முகத்துக்குப் பதிலாக, மாவட்ட மருத்துவர் அணிச் செயலாளராக இருந்த டாக்டர் லட்சுமணன் மாவட்டச் செயலாளரானார். லட்சுமணன் மாவட்டச் செயலாளராக வந்ததும், சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் பலரது கட்சிப் பதவிகளை பறித்து, அந்தப் பதவிகளில் ஏற்கெனவே சண்முகத் தால் ஓரங்கட்டப்பட்ட நபர்களை அமர வைத்தார். சண்முகத்தின் ஆதர வாளர்களான கோலியனூர் ஒன்றியச் செயலாளர் சுரேஷ்பாபு, வல்லம் ஒன்றியச் செயலாளர் அண்ணாதுரை, செஞ்சி நகரச் செயலாளர் சுரேஷ்பாபு, திண்டிவனம் நகரச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் பதவியைப் பறிகொடுத்தவர்களில் முக்கியமான வர்கள். இன்னும் சிலர் தங்களது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக லட்சுமணனி டம் சரண்டர் ஆன சம்பவங்களும் நடந்தன.

இதற்கிடையில் லட்சுமணனை ராஜ்யசபா எம்.பி-யாகவும் தலைமை அங்கீகரித்ததால் தனது முழுமையானக் கட்டுப்பாட்டுக்குள் கட்சியைக் கொண்டு வந்தார்.

இந்நிலையில் திண்டிவனம் நகராட்சிக் கூட்டத்தில் துப்புரவு பணிகளுக்கான தளவாடச் சாமான்கள் வாங்குவது தொடர்பாக 5 லட்சம் ரூபாய்க்கு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து கேள்வி எழுப்பிய அதிமுக கவுன்சிலர் அன்பழகன், நகராட்சிப் பணத்தை கொள்ளையடிப்பதாகச் சொல்லி தீர்மான நகலை கிழித்தெறிந்தார். திண்டிவனம் நகராட்சித் தலைவர் வெங்கடேசன் சி.வி.சண்முகத்தின் விசுவாசி; அன்பழகன் லட்சுமணனின் ஆதரவாளர்.

இரண்டு கோஷ்டிகளுக்கும் எதிரெதிர் துருவங்களாக செயல்படுவதால் கட்சி நிகழ்ச்சிகளுக்காக வைக்கப்படும் பேனர்களிலும் ஒட்டப்படும் போஸ்டர்களிலும் தொகுதி எம்.எல்.ஏ. சண்முகத்தின் பெயரை மறந்தும் போடுவதில்லை லட்சுமணன் கோஷ்டி. ஜெயலலிதா பிறந்த நாள் விழாவைகூட இரு கோஷ்டிகளும் தனித் தனியேதான் கொண்டாடின.

இப்படியே போனால் தேர்தலில் சொந்த கட்சி வேட்பாளரையே தோற்கடித்து விடுவார்கள் என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x