Published : 17 Jul 2021 03:14 AM
Last Updated : 17 Jul 2021 03:14 AM

ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்ய மக்கள் அவதி: அலைக்கழிப்புக்கு ஆளாவோர் முறைப்படுத்த அரசுக்கு கோரிக்கை

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இ- சேவை மையம் முன்பு குவிந்துள்ள பொதுமக்கள்.

விழுப்புரம்

ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்ய மக்கள் அவதிப் படுகின்றனர்.

பெரும்பாலான இடங்களில் நமது அடையாள ஆவணமாக பயன்படுத்தப்படும் ஆதார் அட்டை மிகமுக்கியமான ஆவணங்களில் ஒன் றாகும். பல முக்கிய பணிகளுக்கு ஆதார் தேவைப்படுகின்றது. ஆதார்அட்டையின் அனைத்து விவரங்க ளும் முற்றிலும் சரியானவையாக இருப்பது மிகவும் முக்கியமாகும். பிறந்த நாள், பெயர், முகவரி போன்றவற்றை சரியாக நிரப்புவது அவசியம். இல்லையெனில் ஆதார் தொடர்பான பல வேலைகள் சிக்கிக்கொள்ளக்கூடும்.

ஆதார் அட்டையில் கொடுக்கப் பட்டுள்ள பெயர், பிறந்த தேதி போன்ற பல தகவல்களை ஆன்லைனில் மாற்றலாம். ஆனால் முகவரியை மாற்றுவதில் சிக்கல் உள்ளது. இந்த பிரச்சினை பெரும் பாலும் வாடகை வீடுகளில் வசிப் பவர்களுக்கு வருகிறது. ஏனெனில் வீட்டை மாற்றிய பின் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மீண்டும் மாற்றுவது கடினமாக இருக்கிறது.

ஆதார் அட்டையில் நிரந்தர முகவரியை மாற்ற மக்கள் ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டும். அங்கே அவர்கள் அனைத்து துணை ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.அதற்கு பிறகு தான், ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவதற்கான பயன்பாட் டைப் பயன்படுத்த முடியும்.

ஆன் லைனில் இதனை மாற்றுவதற்கான வசதி இருந் தாலும், தேசிய மயமாக்கபட்ட, தனியார் வங்கிகள் மற்றும் அரசு இ சேவை மையங்களை நோக்கித்தான் ஏழை எளிய மக்கள் செல்கிறார்கள்.

முகவரி மாற்றத்திற்கு குரூப் ஏ மற்றும் பி அலுவலர்கள் கையெழுத்து போட்டால்தான் முக வரியை மாற்றமுடியும் என்றநிலை உள்ளது. இந்த கையெ ழுத்துக்கு அதிகபட்சம் ரூ. 300 வசூலிக்கப்படுகிறது. மேலும் அரசு இ- சேவை மையத்தில் அதிகபட்சம் ரூ. 100 முகவரி மாற்றத்திற்கு சேவை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

அதே நேரம் இச்சேவையை அளிக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் இதற்கான சேவை கட்டணத்தை தங்களின் விருப்பம் போல பெறுகிறார்கள்.

ஒருவர் தன் முகவரி மாற்றத் திற்காக குறைந்தபட்சம் ரூ. 500 செலவழிக்கவேண்டியுள்ளது. இதனை முறைபடுத்தவேண்டும்.

மத்திய அரசு சுய சான்றளிப்பு முறையை கொண்டுவந்தாலும், ஆதார் அட்டையில் முகவரி மாற்றத்திற்கு இதனை இன்னமும் நடைமுறைபடுத்தாமல் இருப்பதால் ஏழை எளியமக்கள் இதற்காக2, 3 நாட்களை செலவழிக்க வேண்டியுள்ளது. இதனை அரசு முறைப்படுத்தவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x