Published : 15 Jul 2021 08:10 PM
Last Updated : 15 Jul 2021 08:10 PM
மதுரை நகரில் நிர்வாகக் காரணம், துரித நடவடிக்கைக்காக மே மாதம் முதல் சில காவல் நிலையங்களின் எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
மாற்றியமைக்கப்பட்ட எல்லைகள் உரிய காவல் நிலைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இது குறித்த காவல் ஆணையர் அலுவலக செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:
மதுரை பெருங்குடி காவல் நிலைய எல்லையிலுள்ள வார்டு 10 வது வார்டுக்கு உட்பட்ட இந்திரா நகர், ஆஞ்சநேயா நகர், அம்பேத்கர் நகர், திருவள்ளுவர் நகர் விரிவாக்கம், திருவள்ளுவர் நகர், மத்திய குறிஞ்சி நகர், அரவிந்த் நகர், பிஆர்சி காலனி, கலைநகர், காமராஜ தெரு, தனக்கன்குளம், ஜெயம் நகர், கிருஷ்ணா நகர், ஐயர் காலனி, நேதாஜி நகர், யோகா நகர், காத்திகா நகர், சாந்தி நகர், மீனாட்சி நகர், முல்லை நகர் மற்றும் விளாச்சேரி ஊராட்சியிலுள்ள மொட்டமலை, கேகே நகர், கலைநகர், ஆதிசிவன் நகர், விளாச்சேரி வடக்கு முஸ்லிம் தெரு ,தெற்கு முஸ்லிம் தெதரு, வேலர் தெரு, காந்தி செட்டி தெரு, யாதவர் தெரு, நேதாஜி தெரு, அக்ரகாரம், சேவுகர் தெரு, கொட்டாரம், விளாச்சேரி பிரதான சாலை, அண்ணா தெரு ஆகிய பகுதிகள் திருநகர் காவல் நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
அவனியாபுரம் காவல் நிலைய கட்டுப்பாட்டில் இருந்த 60வது வார்டுக்கு உட்பட்ட பிரசன்னா காலனி, சின்ன உடைப்பு முதல் சேர்மத்தாய் வாசன் கல்லூரி சந்திப்பு வரை, சுற்றுச்சாலையின் வடபகுதிகள் பெருங்குடி காவல் நிலைய கட்டுப்பாட்டிலும், 60வது வார்டில் இருந்த சேர்மத்தாய் வாசன் கல்லூரி சந்திப்பு முதல் கல்லம்பல் பாலம் வரையிலான பகுதிகள் சிலைமான் காவல் நிலைய கட்டுப்பாட்டிலும் இணைக்கப்பட்டுள்ளன.
இதுவரை திருநகர் காவல் நிலைய கட்டுப்பாட்டில் இருந்த 96வது வார்டுக்கு உட்பட்ட ஓம்சக்தி நகர் 1, 2 ,3 தெருக்கள் ஆஸ்டின்பட்டி காவல் நிலைய எல்லையிலும், மதுரை நகர் சுப்ரமணியபுரம் காவல் நிலைய எல்லையில் இருந்த 95வது வார்டுக்கு உட்பட்ட பசுமலை அண்ணாநகர், புது அம்பேத்கர் நகர், பெத்தானி நகர், வார்டு எண் 75க்கு உட்பட்ட பகுதிகளான முனியாண்டிபுரம், கோபாளிபுரம், மாடக்குளம் பிரதான சாலை மற்றும் அவனியாபுரம் காவல் நிலைய கட்டுபாட்டில் இருந்த 96வது வார்டுக்கு உட்பட்ட செங்குன்றம் நகர், தியாகராசர் கல்லூரி பகுதிகள் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திலும் இணைக்கப்பட்டுள்ளன.
அவனியாபுரம் காவல் நிலைய எல்லலைக்குட்பட்ட வார்டு எண் 57(அனுப்பானடி), வார்டு எண் 58(சிந்தாமணி)க்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும் மதுரை கீரைத்துறை காவல் நிலைய கட்டுப் பாட்டிலும், வார்டு எண் 61க்கு (வில்லாபுரம்புதுநகர்) உட்பட்ட தென்றல்நகர், அம்பேத்கர் நகர் பகுதிகள், ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்திலும் இணைக்கப்பட்டு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன என, மாநகர் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா தெரிவித்துள்ளாார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT