Published : 09 Feb 2016 02:46 PM
Last Updated : 09 Feb 2016 02:46 PM
விசைத்தறி நெசவுத் தொழிலாளர்களுக்கு கூலி குறைக்கப்பட்டதைக் கண்டித்து, அவர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டம், ஆண்டி பட்டி தாலுகாவுக்குட்பட்ட ஜக்கம்பட்டி, டி. சுப்புலாபுரம், கொப்பையன்பட்டி பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விசைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினர்களாக பதிவுபெற்ற நெசவாளர்களுக்கு மட்டும், அந்த சங்கம் மூலம் நூல், கோன் கண்டுகள் கொடுக்கப்பட்டு வருவதோடு, சேலை உற்பத்தி செய்த பின்னர் ஒரு சேலைக்கு ரூ. 85 கூலியாக வழங்கப்பட்டு வந்தது. இதில் ரூ. 5 பிடித்தம் (சேமிப்பு) செய்யப்பட்டு நெசவாளர் கண க்கில் சேர்க்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட காலத்துக்குப் பின் னர் பிடித்தம் செய்யப்பட்ட ப ணம், சம்பந்தப்பட்ட நபருக்கு வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கூலியைக் குறைத்து தருவதாக நெசவாளர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் ஜக்கம்பட்டி நெசவுத் தொழிலாளி டி.பி. மாரிமுத்து கூறியதாவது: நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் சே லைகள் இப்பகுதியில் செயல்படும் ஐந்து கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தமிழக அரசின் இலவச வேஷ்டி, சேலைகள் திட்டத்துக்காக அனு ப்பி வைக்கப்பட்டு வருகிறது.
ஒரு நாளைக்கு சராசரியாக 3 சேலைகள் வரை ஒரு நெசவுத் தொழிலாளியால் உற்பத்தி செய்யப்படும். அந்த சேலைகளை உற்பத்தி செய் வதற்கு, அதிகபட்சமாக 10 மணி நேரம் வரை தேவைப்படுகிறது. இதற்கிடையில் இயந்திரம் பழுது, தறியில் சிக்கல், நூல் அறுந்து விடுதல் எனப் பல காரணங்களால் உற்பத்தி பாதிக்கப்படும். பாவு ஓட்டுதல் (நூல் சேர்த்தல்) அச்சு ஏற்றுதல் வேலைகளுக்கு வெளியிட தொழிலாளர்களுக்கு நாங்கள் கூலி கொடுக்க வேண்டி உள்ளது. எல்லா செலவும் போக ஒரு சேலைக்கு எங்களுக்கு ரூ. 50 முதல் ரூ. 55 வரை கிடைக்கிறது. இந்த நிலையில் கூட்டுறவுச் சங்கங்களில் பணியாற்றும் சில ஊழியர்கள், தங்களுக்கு வேண் டப்பட்ட நபர்களுக்கு மட்டும் நூல், கோன் கண்டு வழங்கி வருகின்றனர். இது கிடைக்காத மற்ற நெசவாளர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். மேலும், சில வாரங்களாக கூட்டுறவுச் சங்கத்தில் நிதி இல்லையெனக் கூறி, கூலி தராமல் அலைக்கழிக்கின்றனர். இதற்கிடையில் ஒவ்வொரு சேலை கூலியிலும் ரூ. 3 குறைத்துள்ளனர். காரணம் கேட்டால், முறையாக பதில் கூற மறுத்து வருகின்றனர். இதனைக் கண்டித்து விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.
இது குறித்து கூட்டுறவு சங்க உயர் அதிகாரி ஒருவரிடம் கேட் டபோது, கூட்டுறவு சங்கங் களுக்கு சுழற்சிமுறையில் நிதி வழங்கப்பட்டு வருகிறது. அதன் காரணமாக, கூலி வழங்க சற்று தாமதம் ஏற்பட்டிருக்கும். கூலி குறைக்கப்பட்டதாக எந்த புகாரும் வரவில்லை, இருந்தாலும் விசாரணை நடத்தி உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT