Published : 14 Jul 2021 03:14 AM
Last Updated : 14 Jul 2021 03:14 AM

மதுரை மருத்துவக் கல்லூரி கரோனா ஆய்வு மையத்தில் 17 லட்சம் பரிசோதனை முடிவுகள்: தமிழகத்திலே அதிக பரிசோதனை செய்து சாதனை

கோப்புப்படம்

மதுரை

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி கரோனா ஆய்வகத்தில் தமிழகத் திலேயே அதிக பரிசோதனைகள் எடுத்து சாதனை படைக்கப் பட்டுள்ளது.

கரோனா தொற்றை கண்டறிய அதி நவீன வசதிகளுடன் கூடிய கரோனா பரிசோதனை மையம், மதுரை மருத்துவக் கல்லூரியில் செயல்படுகிறது.

2020-ம் ஆண்டு மார்ச்சில் நாட்டிலேயே 8-வது பரிசோதனை மையமாக, மத்திய சுகாதாரத் துறையிடம் அனுமதி பெற்று இங்கு தொடங்கப்பட்டது.

இங்குள்ள 9 ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கருவிகள் மூலம் ஒரு மணி நேரத்துக்கு 900 முதல் ஆயிரம் பரிசோதனைகளை மேற் கொண்டு 24 மணி நேரத்தில் முடிவுகள் தெரிவிக்கப்படுகின்றன.

60 ஊழியர்கள்

மதுரை மட்டுமின்றி தஞ்சை, திருச்சி, நீலகிரி மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து அனுப்பப்படும் மாதிரிகளுக்கும் முடிவுகள் தெரிவிக்கப்படுகின்றன. இதுவரை 17 லட்சத்து 60 ஆயிரத்து 925 கரோனா பரிசோதனை முடிவு களை தெரிவித்து சாதனை படை க்கப்பட்டுள்ளது.

இந்த மையம் தமிழகத்திலேயே அதிக பரிசோதனை முடிவுகள் வெளியிட்ட மையமாகத் திகழ் கிறது. மதுரை மருத்துவக் கல்லூரி ஆய்வகத்தில் முதன்முறையாக மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சார்பில் விடிஎம் (VTM) ஸ்டாண்ட் உருவாக்கப்பட்டு பரிசோதனை மாதிரிகள் பாதுகாக்கப்படுகிறது. நாள்தோறும் சுழற்சிமுறையில் 60 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேலுவிடம் கேட்டபோது, சென்னையில் கரோனா பரிசோதனைக்காக 5 ஆய்வகங்கள் உள்ளன. ஆனால், மதுரையில் மருத்துவக் கல்லூரியில் மட்டுமே ஆய்வகம் உள்ளது.

தமிழக அளவில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் மதுரையில்தான் அதிகமான கரோனா பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x