Last Updated : 14 Jul, 2021 03:14 AM

 

Published : 14 Jul 2021 03:14 AM
Last Updated : 14 Jul 2021 03:14 AM

தங்கம் கடத்தி வந்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு: காரைக்குடியில் ‘சுவாரசிய’ சம்பவம்

காரைக்குடி

துபாயில் இருந்து தங்கத்தைக் கடத்தி வந்ததாகக் கூறியவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கும் சுவராசிய சம்பவம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடந் துள்ளது.

காரைக்குடி கற்பகவிநாயகர் வீதியைச் சேர்ந்தவர் திருப்பதி. பி.இ. சிவில் படித்த அவர், துபாயில் பணிபுரிந்தார். கரோனாவால் கடந்த ஆண்டு ஊர் திரும்பியவர், மீண்டும் துபாய் சென்றார்.

அங்கு வேலையில்லாததால் திரும்பவும் ஊர் செல்ல முடிவு செய்தார். ஆனால் பணம் இல்லா ததால், ஊர் திரும்ப முடியாமல் தவித்தார்.

இதுகுறித்து அவரது முதலாளியிடம் கூறினார். விமானநிலைய அதிகாரிகளுக்குத் தெரியாமல் குவியலாக தங்கத்தை இந்தியா கொண்டு சென்றால் ரூ.1.20 லட்சம் கமிஷன் கிடைக்கும் என்றும் அவரிடம் கூறப்பட்டது.

மேலும் அது தொடர்பான தரகர் சதாமையும் அறிமுகப்படுத்தினார். அவர் மற்றொரு நபரிடம் இருந்து மூன்று தங்க உருண்டைகளை வாங்கிக் கொடுத்துள்ளார். அதனை திருப்பதி தனது ஆசனவாயில் வைத்து ஏப்.2-ம் தேதி இந்தியா கொண்டு வந்தார்.

அதில் ஒரு தங்க உருண்டையை அவரது உறவினர் நாகநாதனிடமும், மற்றொரு உருண்டையை தனது முதலாளி கூறிய நபரிடமும் கொடுத்துள்ளார். எஞ்சிய ஒன்றை திருப்பதி வைத்துக் கொண்டார்.

இதற்கிடையே, ஜூலை 3-ம் தேதி திருப்பதி வீட்டுக்கு வந்த மூவர் அவரது தந்தை சவுந்தரபாண்டியனிடம் துபாயில் இருந்து கொடுத்துவிட்ட மூன்று தங்க உருண்டைகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு மிரட்டிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து திருப்பதி தனக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

வெளிநாட்டில் இருந்து தங்க உருண்டைகளை கடத்தி வந்த திருப்பதி மற்றும் அவருடைய வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தினமும் 2 பேர் காவலுக்கு நிற்கின்றனர்.

காவல்நிலையத்தில் மனு கொடுத்தால் விசாரிக்க ஆளில்லை எனக் கூறும் போலீஸார், தங்கம் கடத்தியவருக்கு பாதுகாப்புக் கொடுத்த சம்பவம் காரைக்குடி மக்களிடம் வியப்பை ஏற்படுத்தி யுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x