Published : 10 Jul 2021 11:14 AM
Last Updated : 10 Jul 2021 11:14 AM
ஓய்வூதியதாரர்களுக்கு குடும்ப நல நிதி தர முதற்கட்டமாக ரூ.25 கோடியை விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வயது முதிர்வின் காரணமாக, பணியில் இருந்து ஓய்வுபெறும் அலுவலர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் பயனாக, ஓய்வூதியம் பெற்று வருவோர் திடீரென மரணம் அடையும்போது, அவர்களது குடும்பத்திற்கு உதவிபுரிய உருவாக்கப்பட்ட திட்டமே ஓய்வூதியர் குடும்ப நல நிதி திட்டம் ஆகும். கடந்த 40 ஆண்டுகளாக அரசு அலுவலர்களுக்கு குடும்ப நல நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 13,746 ஓய்வூதியதாரர்களுக்கு குடும்ப நல நிதி தர ரூ.57.34 கோடி நிதி தேவைப்படும் நிலையில், முதற்கட்டமாக ரூ.25 கோடியை விடுவித்து தமிழக அரசு இன்று (ஜூலை 10) அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும், ஓய்வூதியதாரர்களின் பங்களிப்பை ரூ.80-லிருந்து ரூ.150 ஆக உயர்த்தியும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT