Published : 05 Jun 2014 10:16 AM
Last Updated : 05 Jun 2014 10:16 AM

அரேபிய தொழிலதிபரிடம் சிக்கியுள்ள 12 தமிழக மீனவர்கள் தவிப்பு: மீட்கக் கோரி பிரதமர், முதல்வருக்கு மனு

‘அரேபிய தொழிலதிபரின் பிடியி லுள்ள 12 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தமிழக முதல் வருக்கும் பிரதமருக்கும் தெற் காசிய மீனவர் தோழமை அமைப்பு மனு அனுப்பியுள்ளது.

அந்த அமைப்பின் பொதுச் செயலர் அருள்தந்தை சர்ச்சில் புதன்கிழமை கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறையை சேர்ந்த அலி, ஆண்டனி செபாஸ்டின், சதீஸ், பனிப்பிச்சை, ராஜன், புதூரை சேர்ந்த பாலமுருகன், சஞ்செய் பெருமாள், கன்னியாகுமரியை சேர்ந்த தாமஸ், பெலிக்ஸ், சஞ்செய் காந்தி, சகாய ஆன்றோ, இடிந்தகரையை சேர்ந்த சஞ்சா ராஜப்பன் ஆகியோர், துபாயில் அஜ்மன் என்ற இடத்தில் அந்நாட்டை சேர்ந்த மத்தார் என்பவரது விசைப்படகில் மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.

கடந்த 13.4.2014-ம் தேதி துபாயில் இவர்கள் 12 பேரும் கடலில் துபாய் மீனவர்கள் இருவருடன் மீன்பிடித்து கொண்டி ருந்தனர்.

அப்போது துபாயை சேர்ந்த மீனவர் கமீஸ் என்பவர் கடலில் விழுந்து மூழ்கினார். சகமீனவர்கள் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பின், துபாய் நாட்டு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தமிழக மீனவர்கள் குற்றமற்றவர்கள் என்பதை உணர்ந்து அவர்களை விடுவித்தது.

விசைப்படகில் சிறை

ஆனால், அம்மீனவர்களின் அரேபிய முதலாளி, அவர்களை தொடர்ந்து மீன்பிடிக்க செல்ல அனுமதிக்காமலும், தேவையான உணவு வழங்காமலும், கடந்த 40 நாட்களுக்கு மேலாக அவர்களை விசைப்படகிலேயே சிறை வைத்திருத்திருந்தார்.

மீனவர்களது பாஸ்போர்ட் மற்றும் அக்காம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்திருந்தார். இதனால், தமிழக மீனவர்கள் படகைவிட்டு வெளியேற முடியா மலும், பிற மீனவர்களிடம் உதவி கேட்க முடியாமலும் தவித் திருக்கிறார்கள்.

உணவின்றி தவிப்பு

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்குமுன் 12 தமிழக மீனவர்களையும் அந்த அரேபிய முதலாளி விடுவித்திருக்கிறார். ஆனால், பாஸ்போர்ட் மற்றும் அக்காம் ஆகியவற்றை கொடுக்கவில்லை. இதனால், கடந்த 5 நாட்களாக தங்குவதற்கு இடம் இல்லாமலும், உணவு இல்லாமலும், போலீஸாரால் கைது செய்யப்படும் சூழ்நிலையில் உள்ளனர்.

இந்த அப்பாவி மீனவர் களை அரேபிய முதலாளியின் பிடியிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கும், தமிழக முதல் வருக்கும், வெளியுறவுத் துறை அமைச்சருக்கும், துபாயிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் மனு அனுப்பியிருக்கிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x