Published : 08 Jul 2021 03:14 AM
Last Updated : 08 Jul 2021 03:14 AM
கிராமப்புறங்களிலிருந்து விளை யாட்டில் சாதிக்கத்துடிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு சர்வ தேச தரத்தில் பயிற்சியளிப் பதற்காக திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி தொடங்கப்படும் என விளையாட்டுத் துறை அமைச் சர் சிவ.வீ.மெய்யநாதன் உறுதிய ளித்துள்ளார்.
தமிழகத்தில் கிராமப்புறங்க ளைச் சேர்ந்த வீரர், வீராங்க னைகளுக்கு தடகள விளையாட்டு களில் அதிக திறன் இருந்தபோதி லும், முறையான பயிற்சி கிடைக் காததால் பெரியளவில் சாதிக்க முடிவதில்லை. வெகு சிலர் மட்டுமே கடும் பயிற்சி, பங்கேற்பதில் உள்ள சிக்கல்களைக் கடந்து சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் பிரகாசித்து வருகின்றனர். தற்போது கூட ஒலிம்பிக் போட்டியின் தொடர் ஓட்டத்துக்கு இந்தியா சார்பில் பங் கேற்க தகுதி பெற்றுள்ள ஆரோக் கியராஜீவ், நாகநாதன் பாண்டி, தனலட்சுமி, சுபா, ரேவதி ஆகிய 5 பேருமே மிகவும் பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள்.
இவர்களில் ஆரோக்கியராஜீவ், தனலட்சுமி, சுபா ஆகிய 3 பேரும் திருச்சியைச் சேர்ந்தவர்கள்.
திருச்சிக்கு தனி அடையாளம்
இதுகுறித்து முன்னாள் சர்வதேச தடகள வீரரான நல்லுசாமி அண்ணாவி கூறும்போது, ‘‘தடகள விளையாட்டில் திருச்சிக்கு தனி அடையாளம் உள்ளது. இப்பகுதி யிலுள்ள திறமையான வீரர், வீராங்கனைகளைக் கண்டறிந்து, முறைப்படி பயிற்சி அளித்தால், இன்னும் சில ஆண்டுகளில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புண்டு. எனவே, ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான அகாடமியை விரைவில் திருச்சியில் அமைக்க வேண்டும்’’ என்றார்.
அறிவியல் ரீதியான வசதி தேவை
திருச்சி மாவட்ட முன்னாள் விளையாட்டு அலுவலரான பி.கலைச்செல்வன் கூறும் போது, ‘‘திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் சர்வதேச தரத்திலான சிந்தடிக் தடகள ஓடுபாதை உள்ளிட்ட வசதிகள் உள்ள நிலையில், போட்டிக்கு முன்னதாக வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கான பயிற்சி மைதானம் தேவைப்படுகிறது. அதேபோல ஓடுதளங்கள், போட்டி தொடங்குமிடம், முடியுமி டங்களில் துல்லியமாக பதிவா கக்கூடிய வீடியோ கேமராக்கள் பொருத்த வேண்டும். வீரர்களின் திறனை அறிவியல் ரீதியாக கண்காணித்து ஒப்பிடும் வகை யில் கணினியுடன்கூடிய ஆய்வகம், வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனை மையம் அமைக்க வேண்டும். மேலும், கூடுதலாக பயிற்சியாளர்களை நியமித்து திறமையான வீரர்கள், வீராங்கனைகளுக்கு பயிற்சி அளித்தால் தடகள உலகில் திருச்சி தவிர்க்க முடியாத ஒரு மையமாக திகழும். தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகள் இங்கு அதிகளவில் நடத்தக்கூடிய சூழல் உருவாகும்’’ என்றார்.
முதல்வர் நடவடிக்கை
இதுகுறித்து சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாத னிடம் கேட்டபோது, ‘‘திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட் டுள்ளபடி, திருச்சி உட்பட 4 இடங்களில் ஒலிம்பிக் அகாடமி களை தொடங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற் கொண்டு வருகிறார்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT