Published : 07 Jul 2021 03:13 AM
Last Updated : 07 Jul 2021 03:13 AM

தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

விழுப்புரம்

அரசு தொழிற் பயிற்சி நிலையம்,அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களின் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2021-2022 ம் ஆண்டு பயிற்சியில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தொழிற்பயிற்சி நிலையங் களில் (ஐடிஐ) சேர்ந்து பயில www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வருகின்ற 28-ம் தேதிவரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்குப் பிறகு இதே இணையதளத்தில் வெளி யிடப்படும்.

விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

விண்ணப்பதாரர்கள் விண் ணப்பம் பதிவேற்றம் செய்யும் போது தங்களது அசல் ஆவணங்களான மாற்றுச் சான்றிதழ்,மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் முன்னுரிமை கோருவதற்கான சான்றிதழ் ஆகியன பதிவேற்றம் செய்யப்படவேண்டும்.

தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந் தோரும் ரூ.750 உதவித்தொகை மற்றும் விலையில்லா மடிக் கணிணி, மிதிவண்டி, பாடப் புத்தகம், காலணி, சீருடை, வரை படக் கருவிகள், இலவச பஸ் பாஸ் ஆகியவை வழங்கப்படுகிறது.

மேலும் பயிற்சியின் போது பிரபல தொழிற் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் ட்ரெய்னிங் உதவித்தொகையுடன் வழங் கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழிற் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.

மேலும் விவரங்களுக்கு 93801 14610, 80722 17350,97896 95190 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளவும் என அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x