Published : 23 Jun 2014 11:10 AM
Last Updated : 23 Jun 2014 11:10 AM
இந்திய கடலோர காவல் படையின் கப்பல் சாரங்கமும், விமானமும் இந்திய கடல் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவில் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தன. அப்போது, சென்னையில் இருந்து வடகிழக்கு திசையில் 105 கடல் மைல் தூரத்தில் இலங்கையை சேர்ந்த 2 மீன்பிடிப் படகுகளில் 12 மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
இந்திய கடல் எல்லைக்குள் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததற்காக அந்த படகுகளை கடலோர காவல் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த படகையும், அந்த படகில் இருந்த 12 மீனவர்களையும் பிடித்து சென்னை துறைமுகம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். 12 இலங்கை மீனவர்களையும் போலீஸார் கைது செய்து சிறை யில் அடைத்தனர்.
இந்த ஆண்டு இதுவரை இலங்கை மீனவர்கள் 105 பேரை யும், 21 இலங்கை மீன்பிடிப் படகு களையும் இந்திய கடலோர காவல் படையினர் பிடித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT