Published : 02 Jul 2021 12:23 PM
Last Updated : 02 Jul 2021 12:23 PM
நடிகை அளித்த மோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு தள்ளுபடி ஆன நிலையில், முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு தள்ளுபடி ஆன நிலையில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நடிகை ஒருவரிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக்கூறி பழகிய நிலையில் அவருக்கு கட்டாய கருக்கலைப்பு செய்து பின்னர் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றி விட்டதாகவும், இதுகுறித்து கேட்டபோது கொலைமிரட்டல் விடுத்து, தன்னுடன் பழகியபோது எடுக்கப்பட்ட படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாக நடிகை புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கில் தான் கைது செய்யப்படாமல் இருக்கக்கோரி மணிகண்டன் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கில் தாம் கைது செய்யப்படுவோம் என அஞ்சி மணிகண்டன் தலைமறைவானார்.
பின்னர் பெங்களூருவில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தான் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் ஜாமீன் கோரி சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம், முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் தள்ளுடபடி ஆன நிலையில் தற்போது ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “எனக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானது உண்மைக்குப் புறம்பானது. திருமணம் செய்து கொள்வதாக எந்த வகையிலும் புகார் அளித்த பெண்ணை ஏமாற்றவில்லை. எனக்கு புகார் அளித்தவர் ஒன்றும் தெரியாதவர் அல்ல, நன்கு படித்து நல்ல வேலையில் உள்ளவர். ஏற்கனவே நான் திருமணமானவன் என்று அவருக்கு தெரியும்.
இந்த நிலையில் எனக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாருக்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை. நான் கடன் கொடுத்த 5 லட்சம் ரூபாய் பணத்தை கேட்ட பொழுது இந்த பிரச்சனை ஏற்பட்டது, மற்றபடி நான் நிரபராதி எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். இதற்காக நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை ஏற்க தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு அடுதத வாரம் விசாரணைக்கு வர உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT