Last Updated : 01 Jul, 2021 06:43 PM

 

Published : 01 Jul 2021 06:43 PM
Last Updated : 01 Jul 2021 06:43 PM

அவுட்காய் தயாரிப்பு: நரிக்குறவ மக்களிடம் கோவை வனத்துறை விழிப்புணர்வு

கோவை காரமடை வனச்சரகத்துக்கு உட்பட்ட திம்மம்பாளையம் பகுதியில் இன்று நரிக்குறவ மக்களிடம் அவுட்காய் தயாரிப்பில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தல்களை வழங்கிய வனத்துறை, காவல்துறையினர்.

கோவை

அவுட்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டைத் தயாரிக்கக்கூடாது என நரிக்குறவ மக்களிடம் வனத்துறையினர் இன்று (ஜூலை 1) விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கோவை பூச்சியூர் அருகேயுள்ள கதிர்நாயக்கன் பாளையத்தில், காட்டுப் பன்றிகளை வேட்டையாட வைக்கப்பட்ட அவுட்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டு வெடித்து அண்மையில் நாய் ஒன்று உயிரிழந்தது. இதுதொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுதொடர்பாகத் தகவல் தெரிந்தால் 9498181212 என்ற தொலைபேசி எண்ணிலும், 7708100100 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் எனவும் மாவட்டக் காவல்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில், காரமடை வனச்சரக பணியாளர்கள், காரமடை காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் கட்டாஞ்சி கரடு, திம்மம்பாளையம் பகுதியில் இன்று சோதனை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதி மக்களிடையே அவுட்காய் தயாரிக்கக் கூடாது என அறிவுறுத்தினர்.

இதுதொடர்பாக காரமடை வனச்சரக அலுவலர் மனோகரன் கூறும்போது, "திம்மம்பாளையம் பகுதியில் நறிக்குறவர்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்களில் சிலர் அவுட்காய் தயாரித்துப் பயன்படுத்துவதாகத் தெரிகிறது.

இறைச்சிக்காகக் காட்டுப் பன்றியைக் கொல்வதற்காக இதைப் பயன்படுத்துகின்றனர். இதுதொடர்பாக அப்பகுதி மக்களை அழைத்து நாளை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x