Published : 26 Dec 2015 08:32 AM
Last Updated : 26 Dec 2015 08:32 AM
தமிழகத்தில் மொத்தம் 24 ஆயிரத்து 34 ஹெக்டேரில் ஆண்டுக்கு 1,99,234 டன் அளவுக்கு சாம்பார் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. 6,513 ஹெக்டேரில் சாகுபடி செய்து மாநிலத்திலேயே வெங்காய உற்பத்தியில் முதலிடத்தைப் பிடிக்கிறது பெரம்பலூர் மாவட்டம்.
இதுகுறித்து பேசிய வெங்காய விவசாயி இரூர் நடேசன், ‘‘நல்லா விளைஞ்சா ஒரு ஏக்கருக்கு சுமார் 5,600 கிலோ மகசூல் எடுப்போம். ஆனா, அப்படி விளைஞ்சிட்டா எங்கக்கிட்ட கிலோ வெங்காயம் 5 ரூபாய்க்குத் தான் வியாபாரிங்க எடுப்பாங்க. விளைச்சலும் நல்லா இருந்து ஓரளவுக்கு நியாயமான விலையும் கிடைச்சா ஏக்கருக்கு 40 ஆயிரம் வரைக்கும் லாபம் கிடைக்கும். ஆனா, ஒரு பட்டத்துல லாபம் கிடைச்சிட்டா அடுத்த ரெண்டு பட் டத்துல நட்டமாகி போட்டுப் பாத்து ரும். இப்ப, மழை வேற அடிச்சு வெங்காய நாத்துக்கள அழுக வெச்சிருச்சு. அதையெல் லாம் அழிச்சுட்டு புதுசா மறுபடி நட்டுக்கிட்டு இருக்கோம்’’ என்றார்.
தமிழக விவசாயிகள் சங்கத் தின் மாநிலச் செயலாளர் ராஜா சிதம்பரம் கூறும்போது, ‘‘விதை வெங்காயம் இல்லாம உழவு கூலி உள்ளிட்ட செலவு களை மட்டும் கணக்குப் போட் டாலே ஏக்கருக்கு பத்தாயி ரம் ரூபாய் நஷ்ட ஈடு குடுக்கணும். ஆனா, அரசாங்கத்துலருந்து வழக் கம் போல ரூ 5,500 தான் இழப்பீடு குடுக்கப் போறதா சொல்றாங்க. விவசாயிகள் பாதிக்காம இருக்க ணும்னா வெங்காயத்துக்கு அரசே விலை நிர்ணயம் பண்ணணும்.ஆனா, இது அழுகும் பொருள்; விலை நிர்ணயம் பண்ணமுடி யாதுன்னு கைவிரிக்கிது அரசு.
வெங்காயத்தை பதப்படுத்தி வைக்க 2 வருசத்துக்கு முந்தி செட்டிகுளத்துல ரூ 4 கோடி செலவுல குளிர்பதனக் கிடங்கு திறந்தாங்க. ஆனா, அதுக்குள்ள வெச்ச வெங்காயம் எல்லாம் அழுகிப்போச்சு.
வெங்காயத்தை குளிரூட்டி யில் வைச்சா கெட்டுப் போகும்கிற யோசனைகூட இல்ல. வெங்காயத்திற்கு அரசே விலை நிர்ணயம் செய்யணும். இல் லாட்டா, அரசே வெங்காயத்தை கொள் முதல் செஞ்சு சீரான விலை யில மக்களுக்குக் குடுக்கணும். இதைச் செஞ்சாத்தான் வெங் காய விவசாயிகள் தப்பிப் பிழைக் கலாம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT