Published : 15 Dec 2015 04:25 PM
Last Updated : 15 Dec 2015 04:25 PM
மனிதர்களைப் போலவே கால்நடைகளும் மழைக் காலங்களில் பாதிப்படைகின்றன. மழை அதிகமாகப் பொழியும் பருவ காலங்களில் மாட்டுத்தொழுவங்களில் காணப்படும் ஈரக்கசிவு மற்றும் சுகாதாரமற்ற நிலையால் கன்றுகளை அதிகளவில் நோய்கள் தாக்கி வருகின்றன. மழைக் காலங்களில் கன்றுகளில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படுகிறது.
மழை மற்றும் குளிர் காலங்களில் தேவைப்படும் வைட்டமின் ஏ-யின் அளவு கோடை காலங்களின் தேவையைப் போல் இருமடங்காகும். ஆனால் மழை க்காலங்களில் சுரக்கும் சீம்பாலில் வைட்டமின் ‘ஏ’ குறைவாக இருக்கும். எனவே கன்றுகள் நோய்க்கு எளிதில் இலக் காகின்றன. ஆடுகளைப் பொருத்தமட்டில், மழைக் காலங் களில் அவை பெரும்பாலும் கொட்டகைகளிலேயே இருக்க நேரிடுவதால் அவற்றுக்கும் போதுமான பச்சைத்தீவனம் கிடைப்பதில்லை. தற்போது வட கிழக்கு பருவமழை பாதிப்புள்ள மாவட்டங்களில் கால்நடைகள் அதிகளவு நோய் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன.
கோழிப் பண்ணைகளிலும் ரத்தக் கழிச்சல் நோய் பாதிப்பு அதிகமாக உள்ளன.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் இணை இயக்குநர் டாக்டர் வி.ராஜேந்திரன் கூறி யதாவது:
கோழிப் பண்ணைகளிலும் மழைக்கால பராமரிப்பு அவசியம் தேவைப்படுகிறது.
ரத்தக்கழிச்சல் என்ற நோய் கோழிக் குஞ்சுகளில் எல்லா பருவகாலங்களிலும் காணப்பட்டாலும் குறிப்பாக மழைக் காலத்தில் பாதிப்பு கூடுதலாக இருக்கும். பருவ மழைச்சாரலினால் காற்றிலுள்ள ஈரப்பதம் அதிகமாகி காக்சிடியா கிருமிகளின் தொல்லை தீவிரமடைகிறது. காக்சிடியா கிருமிகளே கோழி இனங்களில் ரத்தக் கழிச்சல் நோயை உண்டா க்குகின்றன.
குடற்புழுக்கள் பாதிப்பால் முப்பது சதவீதம் எருமைக் கன்றுகள் இறக்கின்றன. கன்று களின் இறப்பைத் தவிர்க்க மாட்டுத் தொழுவங்களில் சேரும் சாணம், சிறுநீர் போ ன்ற கழிவுப்பொருட்களை உடனுக் குடன் அகற்ற வேண்டும். கன்றுத்தீவனத்தில் வைட்டமின் ஏ-சத்தின் அளவை அதிகரிக்கலாம் அல்லது ஊசி மூலம் செலுத்தலாம். மாட்டுத் தொழுவங்களில் மழைநீர் தேங்காதபடி சற்று மேடான இடங்களில் தொழுவங்களை அமைத்துக்கொள்ள வேண்டும். தாயின் வயிற்றில் கன்றுகள் இருக்கும்போதே குடல் புழுக்கள் கன்றுகளைத் தாக்குகின்றன. என வே கன்றுகளுக்கு மழைக்காலம் தொடங்கும் முன்பே மருத்துவர் ஆலோசனையின்பேரில் மருந்துகள் வழங்கப்பட வேண்டும். கோழிகளில் ஏற்படும் காக்சி டியோசின் நோயைக் கட்டுப்படுத்த காக்சிடியா தடுப்பு மருந்துகளை குஞ்சுப்பருவம் முடியும்வரை தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு சப்பை நோய், ஆடுகளுக்கு துள்ளுமாரி நோய்களினால் மழைக்காலங்கள் பாதிப்பு ஏற்படாமலிருக்க தடுப்பூசி போட வேண்டும்.
பெரிய ஆடுகளுக்கு மழை க்காலம் தொடங்குவதற்கு இருவாரங்களுக்கு முன்பு துள்ளுமாரி தடுப்பூசி போடலாம். சினை ஆடுகளுக்கும் இத்தடுப்பூசி போடுவதன் மூலம் பிறக்கும் குட்டிகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT