Last Updated : 05 Dec, 2015 10:54 AM

 

Published : 05 Dec 2015 10:54 AM
Last Updated : 05 Dec 2015 10:54 AM

கடலூருக்கு நிவாரணப் பொருட்களை விரைந்து சேர்ப்பது எப்படி?

மழை வெள்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்துக்கு மதுரை, திருச்சி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்ட மக்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அனுப்பி வைத்த வண்ணம் உள்ளன.

கடலூர் மாவட்டத்தில் 362 கிராமங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நிவாரணங்கள் குவிந்து வந்தாலும் அவற்றை தென் மாவட்டங்களிலிருந்து நிவாரணப் பொருட்களை கொண்டு வரும் ஆர்வலர்கள் அதனை உடனடியாக சரியான இடத்தில் சேர்க்க இந்த செய்தி வழிகாட்டும்.

தென்மாவட்டங்களிலிருந்து நிவாரணப் பொருட்களுடன் வருபவர்கள் திருச்சி, தொழுதூர், வேப்பூர், விருத்தாச்சலம் பூமங்கலம் மேல்பாதி பெரியாகுறிச்சி வடலூர், குறிஞ்சிப்பாடி, கொல்லஞ்சாவடி மார்க்கமாக வந்தால் கடலூர் கேம்ப் அலுவலகத்தை விரைவில் அடையலாம்.

அங்கு, உணவு ஆய்வாளர்கள் உள்ளனர். அவர்களிடம் நீங்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்களை பொதுமக்களிடம் விநியோகிப்பதற்கான அனுமதிச் சான்றை பெற்றுக் கொள்ளலாம்.

கடலூர் மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் நிவாரணப் பொருட்களை நேரடியாக பாதிக்கப்பட்ட இடத்திற்கு எடுத்துச் செல்லும்போது ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளை நியமித்துள்ளது. எனவே, வெளியூர்களிலிருந்து நிவாரணம் எடுத்து வருபவர்கள் பி.ஆர்.ஓ மதி என்பவரை 9445034112 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். அவ்வாறு தொடர்பு கொண்டால் பொருட்களை கொண்டு வருபவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இதில் சிக்கல் இருந்தால் மாவட்ட ஆட்சியரை 9444139000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x