Published : 27 Jun 2021 03:14 AM
Last Updated : 27 Jun 2021 03:14 AM
பிரபல யூ-டியூபர்கள் ஜி.பி.முத்து, பேபி சூர்யா உள்ளிட்ட 4 பேர் மீது ஆபாசமாக பேசுவதாக ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தெற்குத் தெருவைச் சேர்ந்த வழக்கறிஞர் முஹைதீன் இப்ராகிம் என்பவர் காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகார் மனு:
சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசும் காணொலிப் பதிவுகள் அதிகளவில் வலம் வருகின்றன. தற்போது ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் திறக்காததால் மாணவர்கள் கல்வி கற்பதற்கு இணையத்தில் அதிக நேரம் செலவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதைப் பயன்படுத்தி யூ-டியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அப்பாவி மாணவர்களைக் குறி வைத்து அவர்களை ஆபாச வலைதளங்களுக்கு அடிமை யாக்கி பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஜி.பி. முத்து, திருச்சி சாதனா, பேபி சூர்யா, சிக்கா என்ற சிக்கந்தர் போன்ற பலர் ஆபாசமாக பேசி பல்வேறு காணொலிகளை பதிவேற்றம் செய்துள்ளனர்.
இதனை லட்சக்கணக்கான இளைஞர்கள பார்த்து பகிர்கின்றனர். இவர்களின் உடல் பாவனைகளும், பேச்சுகளும் தமிழ்நாட்டில் கலாச்சாரம் மற்றும் சமூக சீரழிவை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
குறிப்பாக சிறுவர், சிறுமிகளின் மனதை பாதிக்கச் செய்யும் வகையில் இந்தக் காணொலியில் ஆபாச பதிவுகள் இடம் பெறு கின்றன.
இளைய சமுதாயத்தை பாதிக்கும் இத்தகைய இணைய தளங்களைக் கண்டறிந்து, அவற்றை தடை செய்ய வேண் டும். இந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற பதிவுகள் இனி தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT