Published : 26 Jun 2021 03:12 AM
Last Updated : 26 Jun 2021 03:12 AM
கரோனாவால் தந்தையை இழந்த சிறுமியின் ஆசையை மதுரை ஆட்சியர் நிறைவேற்றினார்.
பெங்களூருவில் ஐடி பணியாளராகப் பணிபுரிந்த மதுரை தபால்தந்தி நகரைச் சேர்ந்த தனுஷ்தீபன் என்பவர், கரோனாவால் கடந்த 17-ல் மதுரையில் உயிரிழந்தார். இந் நிலையில், அரசின் நிதியுதவி கோரி அவரது மனைவி சோனா தீபன் விண்ணப்பித்திருந்தார்.
இந்த விண்ணப்பத்தை மதுரை குழந்தைகள் நலக்குழு உறுப்பி னர்கள் பாண்டியராஜா, சண்முகம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதற்காக சோனா தீபன் மதுரை ஆட்சியர் அலுவலகத்துக்கு தனது மகள் டீடாதீபனுடன்(9) நேற்று முன்தினம் வந்திருந்தார்.
அப்போது, சிறுமி மறைந்த தனது தந்தையிடம், எதிர்காலத்தில் ஆட்சியர் ஆவேன் எனக் கூறியதை நினைத்து, தனது தாயிடம் ஆட்சியர் அலுவலகம் எப்படி இருக்கும் எனப் பார்க்க ஆசையாக உள்ளது எனக் கேட் டுள்ளார்.
இதைக் கவனித்த குழந்தைகள் நல அலுவலர் பாண்டியராஜா, சிறுமியின் ஆசையை நிறைவேற்ற முயற்சி எடுத்தார். இதுகுறித்து ஆட்சியர் அனீஷ்சேகரின் கவ னத்துக்கு கொண்டு சென்றார். ஆட்சியரும் அச்சிறுமியை அறைக்கு வரவழைத்தார். அப் போது, ஆட்சியரிடம் சிறுமி ‘எதிர்காலத்தில் ஆட்சியராகி மக்களுக்கு சேவை புரிவேன்’ என்றார். இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த ஆட்சியர் ‘நீ நன்றாகப் படித்து மதுரை ஆட்சியராக வர வேண்டும். இந்த இருக்கையில் நீ அமரும்போது என்னைப் போன்ற வர்கள் அனுமதி கேட்டு உள்ளே வர வேண்டும்' என்றார்.
இதைக்கேட்ட சிறுமியும் மகிழ்ச்சி அடைந்தார். கரோனா வால் தந்தையை இழந்த சிறுமி யின் ஆசையை ஆட்சியர் நிறைவேற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT