Published : 12 Dec 2015 03:53 PM
Last Updated : 12 Dec 2015 03:53 PM

திண்டுக்கல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புத்துயிர் பெறும் பேரணைத் திட்டம்

மத்திய அரசுக்கு திட்ட அறிக்கையை அனுப்பியது மாநகராட்சி

*



திண்டுக்கல் மாநகராட்சியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ள பணிகள் குறித்த விவரங்களை மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு மாநகராட்சி நிர்வாகம் அனுப்பியுள்ளது.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்த தமிழகத்தில் தேர்வுசெய்யப்பட்ட நகரங்களில் திண்டுக்கல்லும் ஒன்று. இதையடுத்து, இத்திட்டத் தின் கீழ் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த அறிக்கையை மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்துக்கு மாநகராட்சி நிர்வாகம் அனுப்பி உள்ளது.

திட்ட விவரம்

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ், திண்டுக் கல்லில் பல ஆண்டுக ளாக கிடப்பில் போடப்பட்டுள்ள வைகை ஆற்றில் இருந்து திண்டுக்கல் நகருக்கு குடிநீர் பெறும் பேரணை திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நகரின் குடிநீர் ஆதாரத்தை அதிகரிக்க முடியும். தற்போது செயல்பட்டு வரும் ஆத்தூர் நீர்த்தேக்கம், காவிரி குடிநீர் திட்டம் ஆகியவற்றுடன் பேரணை திட்டத்தையும் பயன்படுத்தி, நகரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நகரில் நெரிசலைத் தவிர்க்க புதிய பஸ் நிலையம் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இடம் குறித்து தெரிவிக் கப்பட வில்லை. அரசு தலைமை மருத் துவமனை மற்றும் நாகல் நகர் சந்திப்பு பகுதியில் மக்கள் சாலை யைக் கடக்க நடைமேம் பாலங்கள் அமைக்கவும், பொது இடங்களில் திறந்தவெளி கழிப்பிடத்தை தவிர்க்க பசுமை சுகாதார வளாகங்கள் அமைக்கவும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நகரில் மக்களின் பொழுதுபோக் குக்கு சுற்றுச்சூழல் பூங்கா உருவாக்கப்பட உள்ளது. ஆரம்ப சுகாதார மையங்கள் ஸ்மார்ட் மருத்துவமனைகளாக மாற்றப்பட வுள்ளன. மாநகராட்சியில் உள்ள அனைத்து பிரிவுகளையும் ஒருங்கிணைத்து செயல்படும் வகையில் பிறப்பு, இறப்பு சான்றி தழ்கள், சொத்து, குடிநீர் வரிகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இ-சேவை மையம் மூலம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

நகரில் பூமிக்கடியில் மின்சார வயர்கள் அமைக்கவும், 50 சதவீத மின்சாரத்தை மிச்சப்படுத்த தெருவிளக்கு உள்ளிட்டவற்றில் எல்.இ.டி. பல்புகள் பொருத்தப்பட உள்ளன. நகரின் முக்கிய இடங் களில் கேமிராக்கள் பொருத் தப்பட்டு, கண்காணிப்பு மையங் கள் அமைக்க திட்டமிடப்பட்டுள் ளன.

மாநகராட்சிக்கு ‘மொபைல் ஆப்’

திண்டுக்கல் மாநகராட்சிக்கென தனி ‘மொபைல் ஆப்’ உருவாக்கப்பட உள்ளது. இதன்மூலம், மாநகராட்சியில் உள்ள அனைத்து பிரிவுகளின் விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம். செலுத்தவேண்டிய வரி உள்ளிட்ட விவரங்களையும் இதன் மூலம் அறியலாம்.

முக்கிய இடங்களில் ‘வைபை’ வசதி, சாலையில் சைக்கிளில் செல்பவர்களுக்கு தனிப்பாதை. நகரில் தினமும் குடிநீர் விநியோகம், நகரில் பாதசாரிகளுக்கு நடைமேடை, தேவைப்படும் இடங்களில் பெஞ்சுகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட உள்ளதாக திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x