Published : 05 Dec 2015 09:58 AM
Last Updated : 05 Dec 2015 09:58 AM
மறைந்த தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமியின் உடல், நாளை தகனம் செய்யப்படுகிறது. அவரது அண்ணன் மகன் அண்ணாமலை இறுதிச் சடங்குகளை செய்கிறார்.
உடல்நலக் குறைவு காரண மாக சென்னை தனியார் மருத் துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி, சிகிச்சை பலனின்றி கடந்த புதன்கிழமை காலமானார். தொடர் மழை காரணமாக அவரது இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதைய டுத்து அவரது உடல் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணிக்கு எம்.ஏ.எம். உடல், ஆர்.ஏ.புரத்தில் உள்ள செட்டிநாடு அரண்மனைக்கு எடுத்து வரப்பட்டு, பொதுமக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களின் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. நாளை காலையில் இறுதிச் சடங் குகள் நடக்கின்றன. பிற்பகல் 2 மணிக்கு மயிலாப்பூர் மின் மயானத்தில் எம்.ஏ.எம். உடல் தகனம் செய்யப்படுகிறது.
தனது சுவீகாரப் புதல்வர் ஐயப்பன், தனக்கு இறுதிச் சடங்குகள் செய்யக் கூடாது என எம்.ஏ.எம்.ராமசாமி, முன்கூட்டியே உயில் எழுதி வைத்துவிட்டார். இதனால், ஐயப்பனுக்குப் பதிலாக எம்.ஏ.எம்-மின் அண்ணன் எம்.ஏ.எம்.முத்தையாவின் மகன் எம்.ஏ.எம்.எம்.அண்ணாமலை, இறுதிச் சடங்குகளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் ஸ்பிக் நிறுவனத் தலைவர் ஏ.சி.முத்தையா கூறியதாவது: ஐயப்பனோ, அவரைச் சார்ந்த வர்களோ, அவரது பிள்ளைகளோ எக்காரணம் கொண்டும் தனக்கு எவ்விதமான இறுதிச் சடங்குகளை யும் செய்யக்கூடாது என எம்.ஏ.எம். தெளிவாக உயிலில் குறிப்பிட்டுள்ளார். அதனால் அவரது அண்ணன் மகன் அண்ணா மலையை இறுதிச் சடங்குகள் செய்ய வைக்கலாம் என செட்டி நாடு குடும்பத்தில் முடிவெடுத் திருக்கிறோம்.
இந்த விஷயத்தை ஐயப்பனிடம் தெளிவாக எடுத்துச் சொன்ன பிறகும், இறுதிச்சடங்குகள் செய்ய தன்னை அனுமதிக்க வேண்டும் என்று அவர் கேட்டார். அது முடியாது என்றதும் தனது மகன் ராமசாமியையாவது கொள்ளி வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டார். ‘உயிலில் உள்ள தற்கு மாறாக செயல்படுவது எம்.ஏ.எம்-மை அவமதித்ததுபோல ஆகிவிடும்’ என்று சொன்னேன். அதை அமைதியாகக் கேட்டுக் கொண்டவர், இறுதிச் சடங்குகள் செய்யும்போது உடனிருக்கவாவது தனது மகனை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு ஆட்சேபனை இல்லை என்று சொல்லி இருக்கிறோம்.
இவ்வாறு ஏ.சி.முத்தையா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT