Published : 22 Dec 2015 08:16 AM
Last Updated : 22 Dec 2015 08:16 AM
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸிடம் பேச்சுவார்த்தை நடத்த பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி மூலம் தமிழக பாஜக தலைவர்கள் முயற்சி மேற்கொண்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்த லில் பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. கூட்டணியில் பாஜக சார்பாக பொன்.ராதாகிருஷ்ணன், பாமக சார்பாக அன்புமணி ஆகியோர் வெற்றி பெற்றனர். தற்போது, அன்புமணியை முதல்வர் வேட்பா ளராக அறிவித்து சட்டப்பேரவை தேர்தலுக்காக பாமக செயல்பட்டு வருகிறது. மேலும், கடந்த 19-ம் தேதி திருச்சியில் பேசிய ராமதாஸ், “பாஜக உடன் மக்களவைத் தேர்த லில் தொகுதி உடன்பாடு மட்டுமே ஏற்படுத்தி கொண்டோம். தேர்தல் முடிந்த பிறகு நேசம், பாசம், ஒட்டு, உறவு எல்லாம் முடிந்து விட்டது” என்றார்.
அவரது பேச்சால் தமிழக பாஜக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கடந்த 19-ம் தேதி பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணியை மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தொடர்புகொண்டு பேசியதாகவும், ராமதாஸ், அன்பு மணி இருவரையும் ஒரே நேரத்தில் ஒன்றாக சந்திக்க சம்மதமும், நேரமும் பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டதாகவும், அதை கட்சித் தலைமையிடம் ஜி.கே.மணி கூறி இருப்பதாகவும் பாமக முக்கிய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘முதல்வர் வேட்பாளராக கட்சித் தலைமை என்னை ஒருமனதாக ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டிவரும் நிலையில், அதில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது. ஆனால், துணை முதல்வர் பதவி, கூட்டணி ஆட்சி ஆகியவற்றுக்கு பாமக தயாராக உள்ளது’ என்று தெரிவித் துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment