Published : 10 Dec 2015 08:54 AM
Last Updated : 10 Dec 2015 08:54 AM
சென்னையில் பெய்த கனமழையினால் சாலை போக்குவரத்து முடங்கியபோது கடந்த 3-ம் தேதியன்று ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். மேலும் மழைநீர் உள்ளே செல்வதை தடுக்க ரயில் நிலைய நுழைவாயில்களை 2 அடி உயரம் உயர்த்த முடிவு செய்யப் பட்டுள்ளது.
சென்னை அடையாறில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக கடந்த 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரையில் அண்ணாசாலையிலும், வடபழனி கோயம்பேடு இடையே போக்குவரத்து முற்றிலும் தடைப் பட்டது. இதேபோல், சென்னை கடற்கரை தாம்பரம், செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில் சேவை முற்றிலும் தடைப்பட்டது.
5 நாட்களில் ஒரு கோடி வருவாய்
இதற்கிடையே, ஆலந்தூர் கோயம் பேடு வரையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் தலா ஆயிரம் பயணி கள் காத்திருந்தனர். மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்க நீண்ட தூரத்துக்கு வரிசையில் நின்றனர். கடந்த 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரையில் மொத்தம் 3.5 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதன்மூலம் மெட்ரோ ரயில்வே நிர்வாகத்துக்கு ரூ.1 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
அதிகாரிகள் தகவல்
இது தொடர்பாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறிய தாவது: சமீபத்தில் பெய்த கனமழை யினால் மெட்ரோ போக்குவரத்தின் பயனை பெரிய அளவில் உணர்ந் துள்ளனர். குறிப்பாக கடந்த 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரையில் 3.5 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதன்மூலம் நிர்வாகத்துக்கு ரூ.1 கோடி வருவாய் கிடைத்துள்ளது. தேவைக்கு ஏற்றவாறு மெட்ரோ ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப் பட்டது. குறிப்பாக கடந்த 3-ம் தேதி மட்டுமே ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் பயணம் மேற்கொண்டு இதுவரையில் இல்லாத சாதனையாக மாறியுள்ளது.
இந்த கனமழை பாதிப்புகள் குறித்து ஆராய எங்கள் அதிகாரிகள் குழு நேரில் சென்று ஆய்வுகளை நடத்தியது. இதன்மூலம் நாங்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மேம்படுத்தி கொள்ள நல்ல வாய்ப்பாக இருந்தது. மழைநீர் உள்ளே வருவது, வெளியே செல்லும் வழிகள், பக்கவாட்டில் இருந்து மழைநீர் உள்ளே வராமல் எப்படி தடுப்பது போன்றவை குறித்து ஆய்வு நடத்தினோம். முதல்கட்ட நடவடிக்கையால் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்நுழைவாயில் மற்றும் வெளியே செல்லும் வழிகளில் தற்போதுள்ளதை காட்டிலும் 2 அடிகள் உயர்த்த முடிவு செய்துள்ளோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT