Published : 21 Jun 2021 03:14 AM
Last Updated : 21 Jun 2021 03:14 AM
கோவை, திருப்பூரில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை புறநகர் தெற்கு மாவட்டஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி அதிமுக நிர்வாகிகள் மற்றும் சார்புஅணிகளின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கோவையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அதிமுக கொறடாவும், எம்எல்ஏவுமான எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: சட்டப்பேரவை தேர்தலின்போது, தான் அரசியலில் இருந்து முழுமையாக விலகி இருப்பதாக ஊடகங்கள் மூலம் வி.கே.சசிகலா பகிரங்கமாக அறிவித்தார்.ஆனால், அரசியலில் முக்கியத்துவத்தை தேடிக்கொள்ள, அதிமுகவை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப்போவதாக, ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன்பேசுவதாக வினோதமான ஒரு நாடகத்தை அவர் அரங்கேற்றி வருகிறார்.
சசிகலா அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லை.அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு இக்கூட்டம் அவருக்குகடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. ஒரு குடும்பத்தினர் மீண்டும் அதிமுகவை அபகரித்து விடலாம் என வஞ்சக வலை விரிக்கின்றனர். அவர்களுக்கு அதிமுக ஒருபோதும் அடிபணியாது என்பதுஉள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், எம்எல்ஏக்கள் கே.ஆர்.ஜெயராம், அம்மன் கே.அர்ச்சுணன், அமுல் கந்தசாமி, பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.பி.கந்தசாமி, செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல, திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள்ஆலோசனை கூட்டம் காங்கயம்சாலையில் உள்ள கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில், அவைத் தலைவர் வெ.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் முன்னிலைவகித்தார். எம்எல்ஏக்கள் ஆனந்தன், கே.என் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்திலும், சசிகலாவுக்கு கண்டனம் தெரிவித்தும், அவருடன் அலைபேசியில் பேசியவர்கள் மீது கட்சி தலைமை எடுத்த நடவடிக் கையை வரவேற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT