Published : 21 Jun 2021 03:16 AM
Last Updated : 21 Jun 2021 03:16 AM
விவசாயிகளுக்கான வேளாண் அடையாள அட்டை விரைந்து வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு காரைக்கால் மாவட்ட விவசாயிகளிடையே எழுந்துள் ளது.
புதுச்சேரி மாநிலத்தின் நெற் களஞ்சியமாக விளங்கக் கூடிய காரைக்கால் மாவட்டத்தில் முன்பு சுமார் 10 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி இருந்தது. தற்போது சுமார் 5 ஆயி ரம் ஹெக்டேர் பரப்பில் மட் டுமே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. காவிரி நீரையும், பருவ மழையையும் நம்பியே பெரும்பாலும் இங்கு விவசாயம் செய்யப்படுகிறது. சில பகுதிகளில் ஆழ்குழாய் பாசனமும் உள்ளது.
இந்நிலையில் வங்கிகளில் கடன் உதவி பெறுவது, வேளாண் இடுபொருட்களை மானிய விலையில் பெறுவது போன்ற பல்வேறு காரணங்களுக்காக, விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என விவசாய சங்கப் பிரதிநிதிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வரு கின்றனர்.
இதுதொடர்பாக ஆட்சியர் தலைமையில் ஏற்கெனவே நடை பெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டங்களிலும் தொடர்ந்து கோரி வந்துள்ளனர். குறிப்பிட்ட காலத்துக்குள் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுவிடும் என அந்தக் கூட்டங்களில் அதிகாரிகள் கூறியும், இதுவரை வழங்கப்படவில்லை.
இதுகுறித்து காரை மாவட்ட காவிரி பாசன விவசாயிகள் சங்க துணைத் தலைவர் டி.கே.எஸ்.எம்.கனகசுந்தரம் கூறியது: வங்கிகளில் முன்னர் விவசாயி அல்லாத மற்றவர்களுக்கும் விவசாய நகைக் கடன் கொடுக்கப்பட்டது. தற்போது உண்மையான விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அதனால் வங்கிகளில் கடன் உதவி பெறுவதற்கும், மானிய விலையில் வேளாண் கருவிகள் வாங்குவதற்கும், வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகள், மானிய உதவிகள் பெறுவதற்கும் வேளாண் அடையாள அட்டை இருந்தால் மிக எளிதாக இருக்கும்.
ஒவ்வொரு முறையும் உரிய சான்றுகள் பெற வேண்டி வருவாய் துறை அலுவலகத்துக்கு அலைய வேண்டிய அவசியமிருக்காது. விவசாயிகள் அலைகழிக்கப் படுவது தவிர்க்கப்படும். வேளாண் அட்டைக்கு தேவையான விவரங் கள் வேளாண் துறை மூலம் ஏற் கெனவே விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டுவிட்டது. ஆனால் நீண்ட காலமாகியும் இன்னும் அடையாள அட்டை வழங்கப்படவில்லை என்றார்.
இது குறித்து கூடுதல் வேளாண் இயக்குநர்(பொ) ஜெ.செந்தில் குமார் கூறியது: விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற் கான நடவடிக்கைகள் பெரும் பாலும் முடிந்து விட்டன. ஸ்மார்ட் அட்டையாக வழங்க உத்தேசிக் கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதற் கேற்ற வகையில் செல்போன் செயலி ஒன்று உருவாக்கப்பட்டு அதில் விவரங்களை இணைப் பதற்கான நடைமுறைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து ஆகஸ்ட் மாதத்துக்குள் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT