Published : 09 Dec 2015 03:30 PM
Last Updated : 09 Dec 2015 03:30 PM
சென்னையில் கடும் மழை வெள்ளத்துக்குப் பிறகே நிவாரணப்பணிகள் துரித கதியில் நடைபெற்று வரும் நிலையில், நோய்த்தடுப்பு மருத்துவ முகாம்களில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், நர்சுகளுக்கும் காய்ச்சல், வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது.
புழல் பகுதியில் மருத்துவ முகாமில் கடுமையான நாளாக அமைய நாள் முழுதும் பணியாற்றிய சுந்தரம் மருத்துவ அறக்கட்டளையின் அவசரநிலை மருந்துப் பதிவாளர் தீபக் கிருஷ்ணாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது.
இது குறித்து அவர் கூறும்போது, “முதல்நாள்தான் 500-600 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தோம், மறுநாள் கடும் உடல் வலி மற்றும் காய்ச்சல். ஆனால் நான் பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துக் கொண்டு மறுநாளே பணிக்குத் திரும்பினேன்” என்றார்.
கடந்த சில வாரங்களாக கனமழைக் கொட்டிக் கொண்டிருக்க டாக்டர்கள், நர்சுகள், அவசர ஊர்தி ஓட்டுநர்கள், மருத்துவ நல பணியாளர்கள், அதிக நேரம் பணியாற்றி வருகின்றனர். இதனால் பலரும் மிகவும் களைப்படைந்து விட்டனர். சிலர் காய்ச்சலில் வீழ்ந்தனர். சிலருக்கு மூச்சுக்குழல் தொந்தரவுகளும், பேதியும் ஏற்பட்டது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அப்பல்லோ மருத்துவமனையில் இரண்டு மருத்துவர்களே காய்ச்சல், பேதி, வாந்தி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவச் சேவை இயக்குநர் சத்யபாமா தெரிவித்தார்.
“ஆனால், நாங்கள் இவர்களுக்கு சுகாதார வழிகாட்டு நெறிகளை அறிவுறுத்தியுள்ளோம், தண்ணீரில் சென்று மருத்துவ முகாம் நடத்தும் போது கால்களை பாதுகாத்து கொள்ளுமாறும், தூய குடிநீரை மட்டுமே குடிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளோம்” என்றார்.
“பெரும்பாலான நர்சுகள் 2, 3 ஷிப்டுகள் வேலை செய்ய வேண்டியுள்ளது. இதனால் அவர்களில் சிலருக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.” என்று தமிழ்நாடு அரசு ஒப்பந்த நர்சுகள் நலச் சங்கத்தைச் சேர்ந்த ஆர்.மாரிமுத்து என்பவர் கூறினார்.
108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பலரும் காய்ச்சல், கால் சேற்றுப்புண் என்று அவதியுறுவதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT