Published : 18 Jun 2014 10:06 AM
Last Updated : 18 Jun 2014 10:06 AM

சதானந்தபுரம், செங்கல்பட்டு வனங்களில் சுற்றித்திரிவது ஒரே சிறுத்தைப்புலியா?: வனத் துறையினர் தீவிர கண்காணிப்பு

செங்கல்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் தென்பட்ட சிறுத்தைப்புலிதான் சதா னந்தபுரம் வனப்பகுதியிலும் சுற்றித் திரிகின்றது என சந்தேகிப்பதால் அப்பகுதிகளில் வனத்துறையினர் கேமரா மற்றும் கூண்டுகள் அமைத் துள்ளனர்.

இதுகுறித்து, செங்கல் பட்டு வனத்துறை அதிகாரி கோபு கூறுகையில், “செங்கல்பட்டு அருகே, சிறுத்தைப்புலி நடமாடிய தாக ஆசிரியர் ஒருவர் கூறிய தைத் தொடர்ந்து, வனப்பகுதி கள் கண்காணிக்கப்பட்டுவந்த நிலையில், திருமணி பகுதியில் ஆடு ஒன்றை சிறுத்தைப்புலி கொன்றதாகக் கூறப்பட்டது.

இதையடுத்து இறந்த ஆட் டின் உடல் பாகங்களை வண்ட லூரில் சோதனை செய்ததில், சிறுத்தைப்புலியின் நகங்கள் பதியப் பட்டிருப்பது உறுதி செய்யப் பட்டது. அதனால், திருக்கழுக் குன்றம், செங்கல்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள வனப்பகுதி களில் சிறுத்தைப்புலியை கண் காணிப்பதற்காக, 4 இடங்களில் கேம ராக்களும் 3 இடங்களில் கூண்டுக ளும் அமைக்கப்பட்டன. இதை யடுத்து, வனப்பகுதியில் சிறுத்தைப் புலி நடமாட்டத்தை தீவிரமாக வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், தாம்பரம் அடுத்த சதானந்தபுரம் வனப்பகுதியில் சிறுத்தைப்புலியை பார்த்ததாக, பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டது. அதனால், அப்பகுதிகளில் சிறுத் தைப்புலி நடமாட்டம் உள்ளதா என, கண்காணிப்பதற்காக 4 இடங் களில் கண்காணிப்பு கேமார மற் றும் 3 இடங்களில் கூண்டுகளும் வைக்கப்பட்டன. ஆனால், இது வரை சிறுத்தைப்புலி நடமாட்டத்துக் கான அறிகுறி ஏதும் தென்பட வில்லை. இந்நிலையில், சிறுத்தைப் புலி நடமாட்டம் உள்ளதாகக் கூறப் படும் வனப்பகுதிகள், செங்கல் பட்டில் இருந்து அடுத்தடுத்து அமைந்துள்ள பகுதிகளாகும். எனவே, செங்கல்பட்டு பகுதிக ளில் பார்த்ததாகக் கூறப்படும் சிறுத் தைப்புலிதான், சதானந்தபுரம் வனப் பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றிருக்கலாம். மேலும், பொது மக்கள் பார்த்தாக கூறப்படும் நாட்களைக் கொண்டு பார்க்கும் போது, ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுத்தைப்புலி இருக்க வாய்ப்பு இல்லை. இதுவரை கண் காணிப்பு கேமராக்களில் சிறுத்தைப் புலி நடமாட்டம் பதிவாகவில்லை. எனினும், சிறுத்தைப்புலி நட மாட்டம் உள்ளதாகக் கூறப்பட்ட வனப்பகுதிகளில், தீவிரமாக கண் காணித்து சிறுத்தைப்புலியை பிடிக் கும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், செங்கல்பட்டு வனப் பகுதிகளில் பார்த்ததாகக் கூறப் பட்ட சிறுத்தைப்புலி, சதானந்தபுரம் வனப்பகுதிக்கு சென்றிருந்தாலும் சிறுத்தைப்புலி பிடிபடும் வரை, வனப்பகுதிகளில் அமைக்கப் பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் கூண்டுகள் அகற்றப்படாது” என்றார்.

கடந்த சில நாட்களாக அச்சத்தில் இருக்கும் வனப்பகுதியை ஒட்டி யுள்ள கிராம மக்கள் சிறுத்தைப் புலியை பிடித்தால் மட்டுமே நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x