Published : 16 Dec 2015 10:42 AM
Last Updated : 16 Dec 2015 10:42 AM
அழிந்து வரும் பாரம்பரிய நாட்டு மீன்கள், மீன்பிடி கருவிகள், தொழில் நுட்பங்களை ஆவணப்படுத்தும் பணியை தொடங்கி இருக்கிறது ‘கயல்’ அமைப்பு.
தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் நாட்டு மீன்கள் முக்கிய மானவை. ஆனால், இவ்வகை மீன்களில் பெரும்பாலான இனங் களும், நாட்டு மீன்கள் பிடிக்கும் பாரம்பரிய முறைகளும் கிட்டத் தட்ட அழிந்துவிட்டன. செயற்கை யாக கலப்பு இன மீன்கள் உரு வாக்கப்பட்டு, அவை நீர்நிலை களில் குத்தகை முறையில் வளர்க் கப்படுவதே இதற்குக் காரணம். இந்த நிலையில்தான், கிராமங் களில் நாட்டு மீன்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியைத் தொடங்கி இருக்கிறது ‘கயல்’ அமைப்பு.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய ‘கயல்’ அமைப்பின் ஒருங் கிணைப்பாளர் ரவிச்சந்திரன், “எனது அப்பா 64 வயதுவரை நாட்டு மீன் குத்தகை எடுத்து நாட்டு மீன் பிடித்து வந்தார். நாட்டு மீன்கள் உணவு மட்டுமல்ல; நமது உடலுக்குத் தேவையான மருந்தும் தான். இது தெரியாமல் அவற்றை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். பிராய்லர் கோழிகளைப் போல கலப்பு இன மீன்களை உருவாக்கு கிறார்கள். சீக்கிரம் பலன் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவற்றுக்கு ஊசி மூலம் ரசாயன மருந்தை ஏற்றி உணவை விஷமாக்குகிறார்கள்.
இந்தத் தொழிலில் இருக்கும் பெரு முதலாளிகள், பாரம்பரிய நாட்டு மீன்களை அழித்து நாட்டு மீனவர்களையும் நசுக்குகிறார்கள். கலப்பு இன மீன்களுக்காக ரசாய னத்தைக் கொட்டுவதால் நாட்டு மீன்கள் உற்பத்தியாகும் கண்மாய்கள், குளங்கள் திட்டமிட்டு அழிக்கப் படுகின்றன’’ என்று ஆவேசப்பட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “தானி யங்களை உற்பத்தி செய்வது போலவே நாட்டு மீன் உற்பத்தியும் விவசாயம் போன்றதுதான். நீர் நிலைகளில் தண்ணீரே இல்லை என்றாலும் அவற்றில் உள்ள கரம்பை மண்ணுக்குள் மீன் முட்டைகள் இருக்கும். சித்திரையின் கோடை மழையில் அந்த முட்டைகள் மீன் குஞ்சுகளாகும். ஆடி மழைக்கு அவை வளர ஆரம்பித்து அடுத்த 3 மாதங்களில் படிப்படியாக உணவுக்குத் தயாராகிவிடும்.
நாட்டு மீன்கள் பெரும் வெள் ளத்திலும் தண்ணீரின் ஓட்டத்தை எதிர்த்துச் செல்லும் குணாதிசயம் கொண்டவை. வெள்ளக் காலங் களிலும் நாட்டு மீன்களை பிடிக் கும் தொழில்நுட்பத்தை நம் முன்னோர் தெரிந்து வைத்திருந்தார்கள்.
அதற்காக பானைப்பொறி, கொட்டுப் பொறி போன்ற மீன்பிடி கருவிகளைப் பயன்படுத்தினர். இப்போது இந்தக் கருவிகளெல்லாம் வழக்கொழிந்துவிட்டன.
அதேபோல், நமது பாரம்பரியத் தில் இருந்த 15 வகையான நாட்டு மீன்களில் இப்போது, கூனச்சலிக் கெண்டை, வலனைப்பொடி, செறாக்குறவை, மண்ணு திண்ணிக் குறவை அயிரை, கெண்டை, கெழுத்தி உள்ளிட்ட ஏழெட்டு வகைகளைத் தவிர மற்றவற்றை அழித்து விட்டார்கள்.
தூண்டில் மீனவர்களுக்குப் பிடித்த மான மயில் கெண்டை (Mahseer) மீன்கள் இப்போது தமிழ்நாட்டு நதிகளில் இல்லவே இல்லை. எஞ்சி இருக்கும் மீன் இனங்களையும் நமது முன்னோர்கள் பயன்படுத்திய நாட்டு மீன்பிடி கருவிகளையும் ஆவணப்படுத்தவே ‘கயல்’ பயணத் தைத் தொடங்கி இருக்கிறோம்.
கடந்த 13-ம் தேதி மதுரை வைகை ஆற்றில் பாரம்பரிய நாட்டு மீன்பிடி கருவிகளைப் பயன்படுத்தி நாட்டு மீன்கள் பிடித்துக்காட்டி ஆவ ணப்படுத்தும் பணியைத் தொடங்கினோம். அதைத் தொடர்ந்து மதுரை தேனி மாவட்ட கிராமங்களிலும் மலை அடிவார கிராமங்களிலும் நாட்டு மீன்கள் மற்றும் நன்னீர் வாழ் உயிரினங்கள் குறித்த விழிப் புணர்வை ஏற்படுத்த இருக்கிறோம்.
நம்மிடம் உயிர்ப்புடன் இருக்கும் நாட்டு மீன்கள் எவை, நாம் இழந்துவிட்ட மீன் வளம் மற்றும் இதர நீர்வாழ் உயிரினங்கள், குத்தகை முறையால் நாட்டு மீனவர் சமூகம் சந்தித்த விளைவுகள், நாட்டு மீனவர்கள் பயன்படுத்திய மீன்பிடி கருவிகள் இவற்றை எல்லாம் ஆவணப்படுத்தி, எஞ்சி இருக்கும் நாட்டு மீன்களையாவது அழிவிலிருந்து காக்க வேண்டும் என்பதுதான் இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT