Published : 01 Dec 2015 10:37 AM
Last Updated : 01 Dec 2015 10:37 AM
இந்தியாவில் ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர் 22 லட்சம் பேர் உள்ளனர். இதில், தமிழகத்தில் உள்ள 1.5 லட்சம் பேரில் ஏதுமறியா குழந்தைகள் 3,500 பேர். தொடர் விழிப்புணர்வு பிரச்சாரங்களால், புதிதாக நோய் தொற்றுக்கு உள்ளாகுவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது.
ஆனாலும், ‘ஹெச்ஐவி தாக்கு தலுக்கு உள்ளானவர்’ என்ற விவரம் எப்போது தெரிய வருகிறதோ, அப்போதே அவர்களை சமூகத் திலிருந்து ஒதுக்கிவைப்பதும் தொடங்கிவிடுகிறது.
“பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக எவ்வளவுதான் விழிப் புணர்வும், தன்னம்பிக்கையும் ஏற் படுத்தினாலும், சிலரின் கேலிப் பேச்சுகளால் உயிரிழப்பு ஏற்படு வதைத் தவிர்க்க முடியவில்லை” என்கிறார் திருச்சி வானவில் அமைப் பின் களப் பணியாளர் சரோஜா.
தொடர்ந்து அவர் கூறும்போது, “7 வயதில் எனக்கு அறிமுகமான தினேஷ். அவரது அப்பா எய்ட் ஸால் இறந்துவிட்டார். பாட்டியின் பராமரிப்பில் இருந்த தினேஷுக் கும், அவரது அம்மாவுக்கும் ஹெச்ஐவி பாஸிட்டிவ். எங்கள் வழிகாட்டுதலில் சத்தான உணவு டன், கூட்டு மருந்து (ஏஆர்டி) எடுத்து வந்தார். 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு எலெக்ட்ரீஷியன் வேலைபார்த்து வந்த நிலையில், தினேஷுக்கு நோய்த் தொற்று இருப்பதும், அதற்காக சிகிச்சை மேற்கொள்வதும் பிறருக்கு தெரி ந்தது இதையறிந்த, உடன் பணி யாற்றுவோர், நண்பர்கள் உள்ளிட் டோர் கேலி யாகப் பேசியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த தினேஷ் 2 மாதங்களாக எங்களை ஏமாற்றிவிட்டு, மாத்திரை சாப் பிடாமல் இருந்துள்ளார். “என் பெற் றோர் செய்த தவறுக்கு நான் என்ன செய்வேன்” என விரக்தியுடன் பேசினார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தினேஷின் சிடி கவுன்ட் வெகுவாகக் குறைந்து விட்டது. அவரைக் காப்பாற்ற முடியவில்லை. உலக எய்ட்ஸ் தினமான டிசம்பர் 1-ம் தேதி தினேஷ் இறந்துவிட்டார்.
சமூகத்தை எதிர்கொள்ள..
பாதிக்கப்பட்டவரின் குழந்தை யாக, சிறுவர் சிறுமியாக எங்களி டம் வரும்போது எந்தப் பிரச்சி னையும் இல்லை. வளர்ந்த பின் னர் அவர்கள் இந்த சமூகத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு இன்னும் இங்கு சூழ்நிலை மாறவில்லை. சமூகத்தின் பார்வை மாறும்வரை இதுபோன்ற இழப்புகளை தவிர்க்க முடியாது” என்றார்.
ஹெச்ஐவியுடன் வாழும் கல்லூரி மாணவி ஷோபனா கூறும்போது, “4-ம் வகுப்பு படிக்கும்போது என் அம்மா இறந்தார். அப்போதுதான், அப்பாவுக்கும், எனக்கும் நோய்த் தொற்று இருப்பது தெரிந்தது. அப்போது இருந்து தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வருகிறேன். இதோ, கல்லூரி வரை வந்துவிட் டேன். எந்த நிகழ்ச்சி என்றாலும் புகைப்படத்துக்கு போஸ் கொடுக் கும்போது, முகத்தை முகமூடியால் (மாஸ்க்) மறைத்துக்கொள்வோம். வேறு வழியில்லை.
‘எல்லாவற்றுக்கும் நான்தான் காரணம்’ என்று இப்போதும் அழு கிறார் என் அப்பா. இனி என்ன செய்ய முடியும்? அவர் இறக்கும் முன்பு, எனக்கு திருமணம் செய்துவைக்க ஆசைப்படுகிறார். யாராவது பாஸி டிவ் மாப்பிள்ளையாகப் பார்க்க வேண்டும்.
என்னைப் பற்றிய விவரம் தெரிந் தவுடன், உடன் படிக்கும் தோழி கள் உட்பட அனைவரும் ஒதுக்க ஆரம்பித்து விடுகின்றனர். என் றைக்கு மாஸ்க் இல்லாமல் புகைப் படத்துக்கு போஸ் கொடுக்கி றோமோ, அன்று தான் மக்களி டையே உண்மையான விழிப்பு ணர்வு ஏற்பட்டிருக்குன்னு அர்த்தம். அந்த நாள் என்றைக்கு வருமோ” என்றார் எதிர்பார்ப்பும் ஏக்கமும் நிறைந்த விழிகளுடன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT