Published : 13 Jun 2021 10:42 AM
Last Updated : 13 Jun 2021 10:42 AM

டாஸ்மாக் கடைகள் நாளை முதல் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்து வருவதால் 27 மாவட்டங்களில் நாளை (ஜூன் 14-ம் தேதி) முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 முதல் மாலை 5 வரை செயல்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், டாஸ்மாக் கடைகளை திறப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சில்லறையாக தான் விற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதி கிடையாது. மதுபானம் வாங்க வருவோர் வரிசையில் நிற்க ஏதுவாக தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் 6 அடி இடைவெளிவிட்டு சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். ஒரு அடி சுற்றளவு கொண்ட வட்டத்தினை தடுப்பு வேலிக்குள் வரைய வேண்டும். கூட்டத்தை கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்த பணியாளர்களை நியமித்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கடைகளை திறக்கும் போதும், மூடும் போதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பணியாளர்கள் கட்டாயம் மூன்றடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தினசரி கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்துவருகிறது. நேற்றைய (ஜூன் 13) நிலவரப்படி, தமிழகம் முழுவதும் 15,108 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில், 989 பேருக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொற்று குறைந்துவரும் சூழலில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிடவேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற முடிவு முறைதானா என்பதை முதல்வர் சிந்தித்து பார்க்க வேண்டும் என்றும் அவர் வினா எழுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x