Published : 19 Dec 2015 01:07 PM
Last Updated : 19 Dec 2015 01:07 PM

திறப்புவிழா காணாத காவல் ஆணையர் அலுவலகம்: முதல்வர் உத்தரவுக்காக 5 மாதங்களாக காத்திருப்பு

மதுரையில் இடநெருக்கடியில் செயல்படும் மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழகர்கோவில் சாலையில் ரூ. 7 கோடியில் புதிய அலுவலகம் கட்டப்பட்டும், கடந்த 5 மாதமாக திறக்கப்படாமல் உள்ளது.

சென்னையை அடுத்த பெரிய நகரான மதுரை மாநகரில் 18.62 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மாநகரில் 24 காவல் நிலையங்கள் செயல்படுகின்றன.

மாநகர் காவல் ஆணையர் அலுவலகம் மீனாட்சி கோயில் அருகே 300 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் போதிய வசதியின்றி மிகுந்த இடநெ ருக்கடியில் செயல்படுகிறது.

கோவை, திருச்சி, திருப்பூர், சேலம் போன்ற பிற நகரங் களில் காவல் ஆணையர் அலுவ லகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்து விட்டன. மதுரை மாநகர் காவல் ஆ ணையர் அலுவலகத்துக்கும், அழகர்கோவில் சாலையில் 2.87 ஏக்கரில் சுமார் ரூ. 7 கோடியில் நான்கு மாடிகளுடன் புதிய அலு வலகம் கட்டப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு பிப். 21-ம் தேதி பூமி பூஜை போடப்பட்டு, கடந்த சில மாதத்துக்கு முன்பே, இந்தக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் இருந்தும், இன்னும் அலுவலகம் திறக்கப்படாமல் காட்சிப் பொருளாக உள்ளது. காவல் ஆணையர் அலுவலகம் பழைய அலுவலகத்தில் இடநெருக்கடியில் செயல்படுவதால் போலீஸா ரும், பொதுமக்களும் அவதியடை ந்துள்ளனர்.

இதுகுறித்து மதுரை நுகர்வோர் பாதுகாப்புமைய பொதுச் செயலா ளர் ஜி. முனுசாமி கூறியதாவது:

மதுரை மாநகர எல்லை மேற்கில் விளாங்குடி வரையும், தெற்கில் திருநகர் வரையும், வடக்கில் உலகநேரி உயர் நீதிமன்றம் வரை யும், கிழக்கில் பாண்டிகோயில் சுற்றுச்சாலை வரையும் பல மடங்கு விரிவடைந்துள்ளது. ஆனால், மாநகர் காவல் ஆணையர் அலுவலகம், மீனாட்சி கோயில் அருகே ஜவுளி நிறுவனங்கள், ஜூவல்லரி, சந்தைகள் மற் றும் வணிக நிறுவனங்கள் நிறை ந்த தெற்கு காவல் கூடத் தெருவில் சந்து பகுதியில் 34 ஆண்டுகளாகச் செயல்படுகிறது. இப்பகுதியில் கோயிலுக்கு வரும் பக்தர்கள், கடைகளுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை, வாகனப் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், புறநகர் பகுதியில் இருந்து மக்கள், போராட்ட அனும திகளுக்காக சமூக அமைப்புகள், கட்சிகள் காவல் ஆணையர் அலுவலகத்தை எளிதில் அணுக முடியவில்லை. மாநகரின் அனை த்து பகுதி பொதுமக்களும் எளிதில் அணுக, புதிய காவல் ஆணையர் அலு வலகத்தை விரைவாகத் திற க்க வேண்டும் என்றார்.

திறப்பு தாமதமாகக் காரணம்

புதிய அலுவலக கட்டுமானப் பணிகள், கடந்த ஜூன் மாதம் இறுதியிலேயே முடிவடைந்து விட்டன. கடந்த செப். 1-ம் தேதி அலுவலகம் திறக்கப்படுவதாக இருந்தது. தமிழகம் முழுவதும் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பெரும்பாலான புதிய அரசு கட்டிடங்கள் திறக்கப்பட்டு விட்டன. நிதிப் பிரச்சினையால், மாநகர் காவல் ஆணையர் அலுவலகம் திறக்கப்படாமல் இருப்பதாகத் தெரியவில்லை.

இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, அனைத்து பணிகளும் முடிந்துவிட்டன. அலுவலகம் திறப்பது தொடர்பாக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர் உத்தரவிட்டதும் திறக்கப்படும் எனத் தெரிவித்தனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x