Published : 11 Jun 2021 02:28 PM
Last Updated : 11 Jun 2021 02:28 PM
வடக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது 24 மணி நேரத்தில் வலுவடைந்து ஒடிசா நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு.
வடக்கு வங்கக்கடல் அதனையொட்டிய ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை ஒட்டி உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசாவை நோக்கி நகரக்கக்கூடும், இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு (ஜூன் 11 மற்றும் 12 தேதிகளில்) பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஓரிரு உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய கூடும்.
ஜூன் 13 ஜூன் 14 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஓரிரு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன் 15 அன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஓரிரு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
வங்க கடல் பகுதிகள்
ஜூன் 11 முதல் 13 வரை மேற்கு வங்க கடல் பகுதியில் மத்திய வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடாப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்
ஜூன் 13 முதல் ஜூன் 15 வரை கேரளா, கர்நாடகா கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஜூன் 11 முதல் ஜூன் 15 வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்”.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT