Last Updated : 11 Jun, 2021 11:39 AM

2  

Published : 11 Jun 2021 11:39 AM
Last Updated : 11 Jun 2021 11:39 AM

கல்லணையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு: தஞ்சை தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டார்

முதல்வர் ஸ்டாலின் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளின் படத்தொகுப்பைப் பார்வையிட்டார்.

தஞ்சாவூர்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கல்லணையில் நடைபெறும் புனரமைப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கல்லணையில் சுமார் 122 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை இன்று காலை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நடைபெற்று வரும் பணிகள், அதன் தரம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடத்தினார்.

தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் வல்லம், முதலை முத்து வாரி தூர்வாரும் பணியையும், பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றில் நடைபெறும் தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னதாக, கல்லணைக்கு வந்த முதல்வரை ஆயுதப்படைக் காவலர்கள் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்றனர். தொடர்ந்து முதல்வரை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் உள்ளிட்ட அதிகாரிகள் புத்தகங்களை அளித்து வரவேற்றனர்.

இந்த ஆய்வின்போது நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், இளைஞர் நலம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், எம்.பி.க்கள் தஞ்சாவூர் பழனி மாணிக்கம், திருச்சி சிவா, எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டிஆர்பி ராஜா, நீர்ப்பாசனத் துறை கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா, தூர்வாரும் பணி கண்காணிப்பாளர் பிரதீப் யாதவ் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x