Published : 09 Jun 2021 09:58 PM
Last Updated : 09 Jun 2021 09:58 PM
இந்தோனேசியாவில் மூன்று மாதங்களுக்குப் பிறகு கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து இந்தோனேசிய சுகாதார அமைப்பு தரப்பில், “இந்தோனேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,725 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு ஏற்பட்ட அதிகபட்ச தொற்று இதுவாகும். இந்தோனேசியாவில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 52 ஆயிரம் பேர் வரை பலியாகிவுள்ளனர்.
உலகம் முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன.
மக்கள் மத்தியில் கரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் கரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் கரோனா தடுப்பூசியைப் பெரும்பாலான அளவில் செலுத்திய இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளன.
உலகம் முழுவதும் 17 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT