Published : 07 Jun 2021 07:09 PM
Last Updated : 07 Jun 2021 07:09 PM
ராமேசுவரம் அருகே பாம்பன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் பயன்பாட்டுக்காக பாம்பன் காவல் நிலைய தலைமைக் காவலர் முரளி செல்வம் மற்றும் அவருடைய சகோதரர் விக்னேஸ்வரன் ஆகிய இருவரும் சேர்ந்து ரூபாய் 1,50,000 மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை வழங்கினர்.
கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க ராமநாதபுரம் மாவட்ட காவல் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு நோய்த் தொற்றை தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன் ஆதரவற்ற, வறுமைக் கோடிற்கு கீழுள்ள மக்களுக்கு உணவுப் பொருட்களையும தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் ராமேசுவரம் அருகே பாம்பன் காவல் நிலைய தலைமைக் காவலர் முரளி செல்வம் மற்றும் அவருடைய சகோதரர் விக்னேஸ்வரன் ஆகிய இருவரும் சேர்ந்து பாம்பன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூபாய் 1,50,000 மதிப்பிலான 20 லிட்டர் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி மற்றும் 400 முகக் கவசங்களை மண்டபம் ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் பாக்கியநாதன், சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோரிடம் திங்கட்கிழமை வழங்கினார்.
தலைமைக் காவலரின் இச்செயலை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .கார்த்திக் பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT