Published : 27 Dec 2015 12:01 PM
Last Updated : 27 Dec 2015 12:01 PM

சுற்றுச்சூழல் ஆவணப்படம் தயாரித்து விழிப்புணர்வு: மதுரை ஆட்டோ டிரைவரின் மகத்தான சமூக அக்கறை

‘இப்புவியில் நான் வந்துசெல்வது ஒரு முறைதான். மீண்டும் வரப் போவது இல்லை. எனவே நான் இங்கே ஒரு நற்செயல் புரிந்திட வேண்டும், அதை உடனே நிறை வேற்ற வேண்டும்’ என்றார் முல்லை பெரியாறு அணையை கட்டிய பொறியாளர் பென்னிகுக்.

இவரைப் பின்பற்றி, இவரது பெயரிலேயே பென்னிகுக் அறக்கட்டளை தொடங்கிய மதுரை அரசரடி ஆட்டோ டிரைவர் பி.ராமன் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக தன்னால் முடிந்த உதவிகள் மூலம் ஏழை குழந்தைகளுக்கு இலவச நோட்டுப் புத்தகம், கண் சிகிச்சை முகாம்களை நடத்துவதுடன் மழை சேகரிப்பு, சுற்றுச்சூழல் விழிப்பு ணர்விலும் ஈடுபட்டுள்ளார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், அரசுத் துறை வல்லுநர்களை அழைத்து கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்து பொதுமக்களிடம் அவர் களை நேரடியாக பேச வைக்கிறார். மதுரையில் மரங்கள் வளர்ப்பு, நிலத்தடி நீர் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு உள்ளிட்ட இவரது சமூக அக்கறை விழிப்புணர்வு பிரச் சாரம் மகத்தானது. தன்னுடைய வருமானத்தின் ஒரு பகுதி, நன் கொடைகள் மூலம் சேரும் உதவி கள் மூலம் இவர் இப்பணிகளை மேற்கொள்கிறார்.

இந்நிலையில் தற்போது இவர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற் றிய ஆவணப்படத்தை தயாரித்துள் ளார். அந்தப் படத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, மேம்பாடு அவசியம், வைகை நதியின் போக்கு, மாறி வரும் காலநிலை, மரக்கன்றுகள் நடுதல், காற்று மாசுபடுதலைத் தடுத்தல், குளங்களில் ஏற்படும் கழிவுகளை சீரமைத்தல், குடி யிருப்பு பகுதிகளின் சுகாதாரம் பற்றி அந்தந்த துறை வல்லுநர்களை பேச வைத்துள்ளார்.

இந்த ஆவணப்பட குறுந் தகட்டை கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரையில் வெளியிட்டார். முதற் கட்டமாக மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் குடி யிருப்புகள், பள்ளிகளுக்கு நேரடி யாக சென்று பள்ளி குழந்தை கள், பொதுமக்களிடம் ஆவணப் படத்தை திரையிட்டு காட்டி மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு குறித்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வின் அவசி யத்தை எடுத்துக் கூறி வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: இனியெல்லாம் மழையே பெய்யாது என நினைத்தபோது சென்னை, திருவள்ளூர், கடலூர் மாவட்ட மக்கள் நடுங்கும் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துவிட்டது. 32 ஆண்டுகளுக்கு முன் மாடக்குளம் கண்மாய் உடைந்து மதுரையில் பெரிய வெள்ளம் வந்தது. நாங்கள் குடியிருந்த மாப்பாளையம் குடி சைப் பகுதியில் 200 வீடுகளை தண்ணீர் மூழ்கடித்துவிட்டது. எனக்கு அப்போது சிறிய வயது. ஊர் பெரியவர்கள், இளைஞர்கள் வெள்ளத்தில் தத்தளித்தவர்களை மீட்டு மறுகரைக்கு கொண்டு சேர்த்தனர். உணவு, தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்ட மக்களுக்கு அவர்கள்கூட சேர்ந்து நாங்களும் உதவி செய்தோம். அப்போது அவர் கள் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச் சியைப் பார்த்து இந்த உதவியைத் தொடர்ந்து செய்தால் என்ன என அறக்கட்டளை ஆரம்பித்தேன். அன்று முதல் இன்றுவரை என் னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்.

தற்போது குறைந்துவரும் மழைப் பொழிவு, நிலத்தடி நீரால் 30 ஆண்டு களுக்கு முன் இலவசமாகக் கிடைத்த தண்ணீரை இன்று விலை கொடுத்து வாங்குகிறோம். இதற்கு காரணம் சுற்றுச்சூழல் சீர்கேடு. அதனால், மக்களிடம் மரம் வளர்ப்பு, மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட சுற் றுச்சூழல் விழிப்புணர்வை ஏற் படுத்திவருகிறேன்.

நான் சொன்னால் யாரும் கேட்கமாட்டார்கள். அதனால்தான் பிரபலமானவர் களை அழைத்து வந்து அவர்கள் மூலம் கருத்த ரங்குகள் நடத்து கிறேன். அவர் களை வைத்து சுற்றுச்சூழல் விழிப் புணர்வு ஆவணப் படம் தயாரித் தேன். தற்போது பள்ளி மாண வர்கள் அனைவரிடமும் கணினி உள்ளது. அவர் களிடம் இந்த ஆவணப்பட குறுந்தகட்டை இலவச மாகக் கொடுத் தால் கணினியில் பார்த்து விழிப்புணர்வு அடைவர். அவர்கள் மூலம் மற்றவர்களுக்கும், பெற்றோர்களிடமும் இவை சென்றடையும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x