Published : 07 Jun 2021 11:15 AM
Last Updated : 07 Jun 2021 11:15 AM

ஊரடங்கில் தளர்வு: சுயதொழில் செய்பவர்கள் வெளியில் செல்ல இ-பதிவு கட்டாயம் 

சென்னை

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் வெளியில் செல்பவர்கள், சுயதொழில் செய்பவர்கள் கட்டாயம் இ-பதிவுடன் செல்ல வேண்டும். அதற்காகத் தமிழக அரசின் இ-பதிவு பக்கத்தில் சுயதொழில் செய்பவர்களுக்காகப் புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மே 24ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலாகியுள்ளது. ஜூன் 7 வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலானது. அவசியத் தேவைகளுக்குச் செல்பவர்கள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்பட்டது. இ-பதிவு இல்லாமல் வந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தொற்றுப் பரவல் குறைந்ததை அடுத்து தொற்று குறையாத 11 மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் மெக்கானிக்குகள், பிளம்பர்கள், எலக்ட்ரீஷியன்கள் செயல்படவும், கம்ப்யூட்டர், எலக்ட்ரிக் பொருட்கள், ஹார்ட்வேர் கடைகள், வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருள் விற்பனை செய்யும் கடைகள் இயங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வாகனங்களில் பணிக்குச் செல்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், வெளியில் செல்வோர் இ-பதிவுடன் செல்ல வேண்டும். இதற்காக இ-பதிவில் சுயதொழில் பகுதியும் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் பதிவு செய்து அந்த ஆவணத்துடன் செல்வோர் போலீஸார் நடவடிக்கை இல்லாமல் செல்லலாம். இ-பதிவு இல்லாமல் சென்றால் அபராதம் நிச்சயம்.

இன்று காலை அதிகமானோர் இ-பதிவு செய்தததால் அத்தளம் முடங்கியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x