Published : 04 Jun 2021 05:21 PM
Last Updated : 04 Jun 2021 05:21 PM

கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்பனை: 10 சில்லறை விற்பனையாளர்களின் உரிமம் ரத்து

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

ஆவின் பாலைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 10 சில்லறை விற்பனையாளர்களின் உரிமத்தை ரத்து செய்ய, பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, ஆவின் நிர்வாக மேலாண்மை இயக்குநர் இன்று (ஜூன் 04) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்ற பின் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், 5 முக்கிய அரசாணைகள் பிறப்பித்தார். அதில், இரண்டாவதாக மக்களின் நலன் கருதி, ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் குறைத்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. முதல்வரின் ஆணைக்கிணங்க அமைச்சர் சா.மு.நாசர், நந்தனம் ஆவின் தலைமை அலுவலகத்தில் 16.05.2021 அன்று தொடங்கி வைத்தார்.

விற்பனை விலை:

இந்த அரசாணைக்கு ஏற்ப அனைத்து ஆவின் பார்லர்கள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் குறைத்து, ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து, அமைச்சர் சா.மு.நாசரின் உத்தரவின் அடிப்படையில், ஆவின் மேலாண்மை இயக்குநரால் உடனடியாக சிறப்புக் குழுவை அமைத்து, சென்னையில் உள்ள அனைத்து சில்லறை விற்பனைக் கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில், 21.05.2021 அன்று 11 சில்லறை விற்பனை உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.

தற்பொழுது மேலும் சிறப்புக் குழு பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டபோது கீழ்க்கண்ட 10 சில்லறை விற்பனைக் கடைகளில் ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்பதாகத் தெரியவந்தது.

மேற்கண்ட நபர்களுடைய சில்லறை விற்பனை உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டன. இதுபோன்ற தவறுகளை சில்லறை விற்பனை உரிமையாளர்கள் செய்யும் பட்சத்தில் அவர்கள் உரிமம் ரத்து செய்யப்படும் என, ஆவின் நிர்வாகம் தெரிவித்துக் கொள்கிறது".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x