Published : 26 Dec 2015 11:02 AM
Last Updated : 26 Dec 2015 11:02 AM
தமிழகத்தில் தேங்காய்கள் பெருமளவு எண்ணெய் ஆட்டுவதற்கு பயன்படுத்தப்படுவதால் வருமானம் பாதித்து, தென்னை விவசாயிகள் மாற்று விவசாயத்துக்கு மாறி வருகின்றனர்.
நசிந்து வரும் தென்னை சாகு படியை காப்பாற்ற ‘நீரா’ என்ற பதநீர் இறக்குவது குறித்த வழிவகைகளை இந்திய தென்னை வளர்ச்சி வாரியம் வகுத்து வருகிறது. வாரியத்துடன் இணைந்து தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஆய்வுகள் நடத்தி வருகின்றன.
மாதம் ஒரு முறை என கணக் கிட்டு சென்னையில் 2 முறையும், பொள்ளாச்சி, உடுமலை, தேனி ஆகிய இடங்களில் தலா ஒரு முறையும் 5 ஆய்வுக் கூட்டங்களை தென்னை வளர்ச்சி வாரிய அதி காரிகளும், தென்னை உற்பத்தியா ளர் நிறுவன நிர்வாகிகளும் நடத்தி யுள்ளனர். தஞ்சாவூரில் அடுத்த கூட்டம் ஜன. 1-ல் நடக்க உள்ளது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக தென்னை உற்பத் தியாளர் நிறுவன நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ‘தி இந்து’ செய்தி யாளரிடம் உடுமலைப்பேட்டை தென்னை உற்பத்தியாளர் கம்பெனி நிர்வாக இயக்குநர் செல்வராஜ் கூறியதாவது:
எங்கள் கம்பெனியில் 10 தென்னை விவசாய சங்க கூட்ட மைப்புகள் அங்கம் வகிக்கின்றன. மொத்தம் 1,717 விவசாயிகள் உறுப் பினர்களாக உள்ளனர். தென்னை வளர்ச்சி வாரியத்தால் மானியம் உள்ளிட்ட பயன்கள் கம்பெனிகள் வாயிலாக கூட்டமைப்புகள் மூலம் விவசாயிகளுக்கு நேரடியாகக் கிடைக்கிறது. தமிழ்நாடு முழுவ தும் 13 கம்பெனிகளும், திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 3 கம்பெனி களும் உள்ளன.
‘நீரா’விலிருந்து தென்னை கருப் பட்டி, தென்னை சர்க்கரை, தென் னந் தேன் மற்றும் மதிப்புக்கூட் டப்பட்ட பொருட்கள் தயாரிக்க லாம். தேங்காயிலிருந்து கொப் பரை, தேங்காய் எண்ணெய், வினி கர், இளநீர் பேக்கிங் தயாரிக் கப்படுகிறது.
ஒரு தென்னை மரம், வருடத் துக்கு 180 காய்கள் கொடுக்கிறது. அதில் தேங்காய், கொப்பரை, எண்ணெய் என விற்றால் ரூ.1500 கிடைக்கும். அதுவே ‘நீரா’ எடுத்தால் ரூ.12,000 வரை கிடைக்கிறது. ‘நீரா’வை இறக்குவதற்கு பல விதி முறைகளை அரசு வகுத்துள்ளது. குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே ‘நீரா’எடுக்க உரிமம் வழங்கப்பட்டுள் ளது. உடுமலையில் சுமார் 100 பேருக்கு இந்த உரிமம் உள்ளது. அந்த உரிமம் பெற்றுள்ளவர் கள் எந்த மரங்களில் நீரா எடுக் கிறார்களோ, அந்த மரங்களுக்குரிய விவசாயி களிடம் சான்றிதழ் பெற்றுக் கொடுக்க வேண்டும். ‘நீரா’வை எடுத்து மதியம் 2 மணிக்கு மேல் வைத்தால், புளிப்புத்தன்மை பெற்று கள்ளாகி விடும் என்பதாலேயே இந்த ஏற்பாடு.
கர்நாடகம், கேரளாவில் ‘நீரா’ எடுக்க 2014 மற்றும் 2015-ல் அனுமதிக்கப்பட்டுள்ளது. தாய் லாந்து, சவுதி அரேபியா, துபாய் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி வாய்ப்பும் உள்ளது. தற்போது கேரளத்தில் மட்டும் தினமும் 5 ஆயிரம் லிட்டர் ‘நீரா’ கேட்கின்றனர். அரசு அனுமதிக்காததால் அது முடியவில்லை.
தமிழக தென்னை விவசாயி களை பொறுத்தவரை, இங்குள்ள 10 சதவீத மரங்களுக்கு ‘நீரா’ இறக்க அனுமதி அளித்தால் தென்னை விவசாயம் பிழைத்துக் கொள்ளும்.
நீரா புளித்து கள்ளாக மாறாமல் இருப்பதற்கான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. லேப் மற்றும் கலன் ஒரு யூனிட் அமைக்க ரூ.1.5 கோடி செலவாகும். ஒரு யூனிட் மூலம் 5 ஆயிரம் லிட்டர் ‘நீரா’வை பதப்படுத்தி புட்டியில் அடைக்க முடியும். இதற்கு தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் மாநில அரசும், மத்திய அரசும் சேர்ந்து 50 சதவீதம் மானியம் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ‘நீரா’வுக்கு தமிழகத்தில் விடிவு பிறக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT