Published : 02 Jun 2021 03:14 AM
Last Updated : 02 Jun 2021 03:14 AM
திருச்சி மாநகராட்சிப் பகுதியை விரிவுபடுத்தி, வார்டுகள் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி நகராட்சி 1866 ஜூலை 8-ம் தேதி தொடங்கப்பட்டது. 128 ஆண்டுகளுக்குப் பிறகு 1994 ஜூன் 1-ம் தேதி திருச்சி, ரங்கம், பொன்மலை ஆகிய நகராட்சிகள் மற்றும் கோ-அபி ஷேகபுரம், அரியமங்கலம் பேரூராட்சிகளை இணைத்து 60 வார்டுகளுடன் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
தொடர்ந்து, நிர்வாக வசதிக் காக அரியமங்கலம், கோ-அபிஷே கபுரம், பொன்மலை, ரங்கம் என 4 கோட்டங்களாக பிரிக்கப் பட்டது.
பின்னர், 2011-ல் திருவெறும்பூர் பேரூராட்சி பகுதிகள் இணைக் கப்பட்டு, வார்டுகள் எண்ணிக்கை 60-லிருந்து 65 ஆக உயர்த்தப் பட்டது. இதன்படி, தற்போது திருச்சி மாநகராட்சியில் ரங்கம், அரியமங்கலம் ஆகிய கோட்டங்களில் தலா 15 வார்டுகள், பொன்மலையில் 17 வார்டுகள், அரியமங்கலத்தில் 18 வார்டுகள் என மொத்தம் 65 வார்டுகளில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில், திருச்சி மாநகராட்சிப் பகுதியை விரிவாக் கம் செய்து, வார்டுகள் எண்ணிக் கையை 100 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்கள் கூறியது: 2011-ல் திருச்சி மாநகராட்சியுடன் திரு வெறும்பூர் பகுதியில் 5 வார்டுகளை இணைக்கும்போதே வயலூர் சாலை, கரூர் சாலை, நாமக்கல் சாலை ஆகியவற்றில் உள்ள சில பகுதிகளையும் இணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால், அப்போது இணைக்கப் படவில்லை.
இந்தநிலையில், அண்மையில் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தின்போது, திருச்சி மாநகராட்சியையும் விரிவுபடுத்துவது குறித்து நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு கருத்து தெரிவித்துள்ளார். அவரது கருத்தின் அடிப்படையில் மாநகராட்சியை விரிவுபடுத்துவது குறித்து ஆரம்ப கட்ட ஆலோசனை நடத்தப்பட்டது என்றனர்.
ஏற்கெனவே விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை தேவைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் முழுமை பெறவில்லை. இதேபோல, மாநகர் முழுவதும் தீர்க்கப்படாத பல்வேறு மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற மாநகராட்சி முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகரை மீண்டும் விரிவாக்கம் செய்ய திட்டமிடுவது மாநகராட் சிக்கு வருமானத்தை ஈட்டித் தரும் அதேவேளையில் பொதுமக் களுக்கும் நன்மைகள் கிடைக்க தேவையான நடவடிக்கையையும் எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT