Published : 23 Jun 2014 10:45 AM
Last Updated : 23 Jun 2014 10:45 AM

திருநங்கையர் திரைப்பட விழா:18 படங்கள் திரையிடப்பட்டன - இயக்குநர்கள் கவுரவிப்பு

புதுச்சேரியில் முதல்முறையாக திருநங்கையர் திரைப்படவிழா இரு நாட்கள் நடைபெற்றன. விழாவில் படங்கள் திரையிடலுக்கு பிறகு அப்படங்கள் பற்றிய விவாதமும் நடந்தது.

புதுவையில் முதல் முறையாக திருநங்கையர் திரைப்படவிழா சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடை பெற்றது. தொடக்க நாளில் இரு திரைப்படங்களும், ஞாயிறன்று 16 படங்களும் திரையிடப்பட்டன.

ஞாயிறன்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பட எடிட்டரும் குறும்பட இயக்குநருமான லெனின் விழாவில் பங்கேற்றது தொடர் பாக கூறியதாவது:

‘திருநங்கையர் திரைப்படவிழா வரவேற்க்கத்தக்க விசயம். பல புதிய பரிமாணங்களையும், பல தகவல்களையும் இத்திரைப் படங்கள் மூலம் அறிய முடிந் தது. அதே நேரத்தில் வழக்க மான சினிமா பாணியிலான படங்க ளும் இடம்பெற்றிருந்தன. ஆக்கப் பூர்வமான பணி இது’ என்று குறிப் பிட்டார்.

இவரது 'மதி எனும் மனிதனின் மரணம்' குறும்படம் திரையிடப் பட்டது. படங்கள் திரையிடலுக்கு பிறகு இயக்குநர், தயாரிப்பாளர் கள் கவுரவிக்கப்பட்டனர்.

திருநங்கையர் திரைப்பட விழாவில் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க புதுவை தலை வர் பரசுராமன், சகோதரன் சமூக நல மேம்பாட்டு நிறுவனத்தின் ஷீத்தல் நாயக், திருநங்கையர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என வந்திருந்த பலரும், ‘இது வரவேற்கத் தகுந்த முயற்சி’ என்று குறிப்பிட்டனர். திருநங்கையர் திரைப்படவிழாவில் திருநங்கைகள் குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x